பேச மறுத்த காதலி.. விரக்தியில் மருத்துவ கல்லூரி மாணவர் எடுத்த விபரீத முடிவு!

 
ஆண், சோகம்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்தவர் ரிஷிகேஷ். 18 வயதான இவர், சென்னை போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் உள்ள புகழ்பெற்ற மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு  படித்து வருகிறார். இவர் கடந்த அக்டோபர் 14ம் தேதி தான் கல்லூரியில் சேர்ந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவரது விடுதி அறை நீண்ட நேரம் பூட்டியே கிடந்துள்ளது. அதேபோல் பெற்றோர் செல்போனில் அழைத்தபோதும் நீண்ட நேரமாகியும் போனை எடுக்கவில்லை.

இதனால், அதே கல்லூரியில் படிக்கும் உறவினர் விமலநாதனை விடுதியில் சென்று பார்க்கும்படி அவரது பெற்றோர் கேட்டுள்ளனர். இதையடுத்து விமலநாதன் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது ரிஷிகேஷ் நைலான் கயிற்றில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதையடுத்து அருகில் உள்ள போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

பின்னர் மருத்துவ மாணவரின் உடலை கைப்பற்றிய போரூர் போலீசார், மாணவர் ரிஷிகேஷ் குமாரபாளையத்தில் உள்ள ஒரு பெண்ணை மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்ததும், கடந்த சில நாட்களாக ரிஷிகேஷின் செல்போன் அழைப்புகளுக்கு அந்த பெண் பதிலளிக்க மறுத்து வந்ததும் தெரியவந்தது. இதேபோல் ரிஷிகேஷ் சென்னையில் இருப்பதால் காதலியை பார்க்க முடியவில்லை. இதனால் மனமுடைந்த ரிஷிகேஷ் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் மாணவி உயிரிழந்ததற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web