கோவை கல்லூரி மாணவிக்கு தொடர்ந்து 6 மாதங்களாக பாலியல் சில்மிஷம்.. அத்துமீறிய இளைஞர் கைது!
கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 19 வயது மாணவி ஒருவர் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தினமும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து கோவைக்கு செல்லும் பயணிகள் ரயிலில் கல்லூரிக்கு சென்று பின் மாலை மேட்டுப்பாளையம் திரும்பி வீட்டிற்கு சென்றுக் கொண்டிருப்பதை வழக்கத்தில் வைத்திருந்தார். இந்நிலையில், இப்படி கல்லூரிக்கு ரயிலில் வந்து செல்லும் போது கடந்த 6 மாதங்களாக மேட்டுப்பாளையம் மணி நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் அப்துல் ரசாக் என்பவர் கல்லூரி மாணவியை நோட்டமிட்டுள்ளார்.
அதன் பின்னர் தினந்தோறும் கல்லூரி மாணவியை பின்தொடர்ந்து சென்று மாணவியை உரசுவது, தவறான சைகைகள் காட்டிப் பேசுவது, பாலியல் சில்மிஷம் செய்வது, ஆபாசமாக மாணவியிடம் பேசுவது என்று தொடர்ந்து தொல்லைக் கொடுத்து வந்துள்ளார். இவரது இந்த செயலால் கல்லூரி மாணவி மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி, தனது படிப்பிலும் சரியாக கவனம் செலுத்த முடியாமல் அவதிப்பட்டுள்ளார்.
தினமும் பயந்து பயந்து கல்லூரிக்குச் செல்வதும், பின் பயத்துடனேயே வீடு திரும்புவதுமாக இருந்து வந்த மாணவி, ஒரு கட்டத்தில் அப்துல் ரசாக் எல்லை மீறி சென்று தொல்லைக் கொடுக்க ஆரம்பித்ததும் இது குறித்து கல்லூரி மாணவி மேட்டுப்பாளையம் ரயில்வே போலீசில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், அப்துல் ரசாக் கல்லூரி மாணவிக்கு தொடர்ந்து தொல்லைக் கொடுத்து வந்தது தெரியவந்ததையடுத்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!