இன்ஸ்டாவில் நம்பர் வாங்கி வாட்ஸ் அப்பில் வீடியோ கால்.. ரூ. 2.5 லட்சம் பணம் ஆட்டைய போட்ட பெண்ணுக்கு வலைவீச்சு!

 
சைபர் க்ரைம்

மும்பையின் பிரபாதேவி பகுதியை சேர்ந்த 26 வயது வங்கி ஊழியர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் அறிமுகம் இல்லாத நபருடன் அரட்டை அடித்து ஒரு மணி நேரத்தில் ரூ.2.50 லட்சத்தை இழந்துள்ளார். ஆகஸ்ட் 15 அன்று, நள்ளிரவு 1 மணியளவில், வங்கி ஊழியரின் இன்ஸ்டாகிராம் கணக்கில் தெரியாத பெண்ணிடமிருந்து ஒரு நட்பு கோரிக்கை வந்தது.

இன்ஸ்டா

பெண்கள் விஷயத்தில் வீழ்ந்து கிடக்கும் இந்த வாலிபர் பெண்ணிடம் பேச ஆரம்பித்துள்ளார். சிறிது நேரம் கழித்து இருவரும் தங்கள் வாட்ஸ்அப் எண்ணை பகிர்ந்து கொண்டனர். நள்ளிரவு 1.15 மணியளவில் அவருக்கு வாட்ஸ்அப் வீடியோ அழைப்பு வந்தது. அதில், ஒரு பெண் நிர்வாணமாக ஆபாச செயல்களில் ஈடுபட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர், வீடியோ அழைப்பு துண்டித்தார்.

5 நிமிடங்களுக்குப் பிறகு, வீடியோ அழைப்பின் போது பதிவான வீடியோ வங்கி ஊழியரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு வந்தது. இதை அனுப்பிய பெண், “பணம் அனுப்பு. இல்லையெனில் இந்த வீடியோ உங்கள் இன்ஸ்டாகிராம் நண்பர்களுக்கு பகிரப்படும்” என்று மிரட்டினார். அதன்பின், பயந்துபோன வாலிபர் பணத்தை அனுப்பி வைத்துள்ளார். மேலும், மொத்தம் ரூ. 2.5 லட்சம் பணம் கேட்டு பலமுறை மிரட்டியதால்  பணம் கொடுத்துள்ளார்.

சென்னையில் நவீன தொழில்நுட்ப வசதியுடன் ‘சைபர் தடய ஆய்வகம்’

ஆனால், தொடர்ந்து சித்ரவதை செய்யப்பட்டதால் போலீசில் புகார் அளித்தார். இளைஞரின் புகாரை பெற்ற மும்பை தானே போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து சைபர் கிரைம் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web