உலக முதலீட்டாளர்களே ஒன்று கூடுங்கள்! பிரதமர் மோடி அறைகூவல்!

 
உலக முதலீட்டாளர்களே ஒன்று கூடுங்கள்! பிரதமர் மோடி அறைகூவல்!


உலக அளவில் நடைபெறும் கண்காட்சி எக்ஸ்போ 2020 இன்று துபாயில் தொடங்கியுள்ளது. 2022 மார்ச் 31 வரை தொடர்ச்சியாக பல்வேறு சிறப்பம்சங்களுடன் இந்த கண்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் அமீரகம், இந்தியா உள்பட 192 நாடுகள் இந்த கண்காட்சியில் பங்கேற்க உள்ளன.

உலக முதலீட்டாளர்களே ஒன்று கூடுங்கள்! பிரதமர் மோடி அறைகூவல்!


இந்தக் கண்காட்சியில் ஒவ்வொரு நாடும் தங்களுடைய தனிச்சிறப்பை வெளிப்படுத்தும் வகையில் தொழில்நுட்பங்கள், கலை, இசை மற்றும் பாரம்பரிய நிகழ்ச்சிகள் என பிரத்யேக அரங்கங்களை அமைத்துள்ளன.
இந்தியா வடிவமைத்துள்ள அரங்கில் கூடியவர்களிடம் இந்திய பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசினார்.

உலக முதலீட்டாளர்களே ஒன்று கூடுங்கள்! பிரதமர் மோடி அறைகூவல்!
DUBAI, MARCH 07 2021: General view of Alif – The Mobility Pavilion at Expo 2020 Dubai. (Photo by Suneesh Sudhakaran/Expo 2020 Dubai)

அப்போது ‘‘இந்தியா வர்த்தகம் செய்ய ஏற்ற நாடாக விளங்குகிறது. இங்கு செய்யப்படும் முதலீடுகள் அனைத்தும் அதிகபட்ச வளர்ச்சி அடைகின்றன. இதன் அடிப்படையில் உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும்.
இந்தியாவில் முதலீடு செய்வதன் மூலம் இந்தியாவின் வளர்ச்சியில் நீங்களும் இணையலாம். கலை, வணிகம் தொழில் அல்லது கல்வித்துறை என எல்லா வாய்ப்புக்களும் இந்தியாவில் குவிந்துள்ளன என உலக முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

From around the web