தங்கத்தில் மாலை... 600 சவரன் நகைகள்... வாய் பிளக்க வைதத நடிகர் வேல ராமமூர்த்தி பேத்தி கல்யாணம்!
தங்கத்தினாலான மாலை, ஜாக்கெட் விலை மட்டுமே ரூ.3 லட்சம் என்கிறார்கள். 600 சவரன் நகைகள்... ஊரே வாய் பிளக்க கோலாகலமாக பேத்தியின் கல்யாணத்தை நடத்தி முடித்திருக்கிறார் நடிகர் வேல ராமமூர்த்தி.
பொதுவாக திருமணத்தின் போது மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மாலைகளை பார்த்திருப்போம். ஆனால், திருநெல்வேலியில் நடந்த திருமணத்தில் மணமக்கள் அணிந்திருந்த மாலைகள் தங்கத்தால் செய்யப்பட்டரிந்தது இணையதளத்தில் புயலை கிளப்பியுள்ளது. அதே போல மணமகள் அணிந்திருந்த புடவையின் மதிப்பு 8 லட்சம் என்றும், அவர் அணிந்திருந்த ஜாக்கெட்டின் விலை 3 லட்சம் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி மணப்பெண்ணுக்கு 600 சவரன் நகையும் கொடுக்கப்பட்டதாக வாய் பிளக்கிறார்கள்.
அதேபோல் இந்த திருமணத்தில் சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜன் சமைத்தார். அதேபோல் சூப்பர் சிங்கர் பிரபலங்களும் கச்சேரிகளை நடத்தியுள்ளனர். சாதாரணமாக திருமணங்கள் மண்டபத்தில் நடப்பதை நாம் பார்த்திருப்போம்.ஆனால் இந்த திருமணத்தை நடத்த திருநெல்வேலி டிரேட் சென்டரில் பல லட்சம் செலவு செய்து மண்டபம் வடிவில் செட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திருமணம் நடக்கும் இடத்தை அந்த பகுதி மக்கள் அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர். திருநெல்வேலி தொழிலதிபர் ஆர்.எஸ்.முருகனின் திருமணம் இது. ஆனால் மணமகள் வேறு யாருமல்ல, பலருக்கும் பரிச்சயமான நடிகர் வேல ராமமூர்த்தியின் பேத்திதான்.
நடிகர் வேல ராமமூர்த்தி பல படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். அவரும் ஒரு எழுத்தாளர் என்பது பலருக்கும் தெரியும். வெள்ளித்திரையில் தொடர்ந்து நடித்து வரும் வேல ராமமூர்த்தி, சின்னத்திரையில் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சில வாரங்களுக்கு முன்பு, வேல ராமமூர்த்தி தனது பேத்தியின் திருமணத்திற்காக பல பிரபலங்களுக்கு பத்திரிக்கைகளை கொடுத்துக் கொண்டிருந்தார். தற்போது இந்த திருமண வீடியோக்கள் குறித்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!