ரூ.10லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்... அண்ணன், தங்கை கைது!

 
திருச்சியில் காரில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது!

தூத்துக்குடி மாவட்டத்தில் வீட்டில் பதுக்கிய  ரூ.10லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அண்ணன், தங்கை கைது செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் தனிப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.  அப்போது தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தில் ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து 5 கிலோ 750 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கஞ்சா

இதன் மதிப்பு ரூபாய் 10 லட்சம் ஆகும். இது தொடர்பாக அற்புதராஜ் மகன் மைக்கேல்ராஜ் (30), இவரது தங்கையான சண்முகசிவா மனைவி ஜெபா (27) ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக, தூத்துக்குடி அண்ணா நகரைச் சேர்ந்த விக்கி, பிரகாஷ் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

கஞ்சா கடத்தல்

பறிமுதல் செய்த 5¾  கிலோ கஞ்சா, 2 செல்போன்கள், தப்பி ஓடியவர்கள் விட்டுச் சென்ற பைக் ஆகியவற்றை தனிப்பிரிவு போலீசார் வடபாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கைதான மைக்கேல்ராஜ் மீது தாளமுத்துநகர், வடபாகம், தென்பாகம், புதுக்கோட்டை உள்ளிட்ட காவல் நிலையங்களில் கஞ்சா விற்பனை, வழிப்பறி, கொலை முயற்சி உள்ளிட்ட  வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web