கேம் ஆப் த்ரோன்ஸ் நடிகர் திடீர் மரணம்.. சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!
'கேம் ஆப் த்ரோன்ஸ்' தொடரில் கெவன் லானிஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்த இயன் கெல்டர் காலமானார். அவருக்கு வயது 74. கேம் ஆப் த்ரோன்ஸ் ரசிகர்கள் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவரது கணவரும் நடிகருமான பென் டேனியல்ஸ், “இது மிகப்பெரிய சோகம். "எனது அன்புக் கணவரும் வாழ்க்கைத் துணைவருமான இயன் கெல்டரின் காலமானதை நான் உடைந்த இதயத்துடன் அறிவிக்கிறேன்," என்று அவர் கூறினார்.
1991-ல் அமெரிக்காவைச் சேர்ந்த ஜார்ஜ் ஆர்.ஆர். மார்ட்டின் எழுதிய 'ஏ சாங் ஆஃப் ஐஸ் அண்ட் ஃபயர்' என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' தொடர் உருவாகியுள்ளது. இந்தத் தொடரின் முதல் எபிசோட் 2011 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்தத் தொடர், 2019 இல் அதன் 8வது சீசனுடன் முடிவடைந்தது.
முக்கியமாக இந்த தொடர் இந்தியாவில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு ஜியோ சினிமாஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!