நடிகை ரேவதி முதல் அன்சிபா வரை ... பாலியல் சீண்டலுக்கு ஆளானேன்... கதறும் மோலிவுட் நட்சத்திர நடிகைகள்!

 
revathy

 திரையுலகில் ஜனரஞ்சகமான திரைப்படங்களை கொடுத்து மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருபவை மலையாளப் படங்கள். இத்திரையுலகம் இன்று சுழலில் சிக்கியிருப்பதாக கூறினால் அது மிகையல்ல. இந்நிலையில்  நீதிபதி ஹேமாவின் தலைமையின் கீழ் ஒரு குழுவானது அமைக்கப்பட்டு, கேரள திரையுலகில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு அவை அறிக்கையாக வெளியாகின.  223 பக்கம் கொண்ட அந்த அறிக்கை, நேரடியாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயனிடம் ஒப்படைக்கப்பட்டது.  கேரள திரையுலகில் "அட்ஜஸ்ட்மென்ட்" என்பது தலைவிரித்தாடும் ஒரு கொடூரமாக மாறிவிட்டது என முதல்வருக்கு அடுத்தடுத்து பல புகார்கள் பறந்ததே இதற்கு காரணம். இதன் அடிப்படையில்  இந்த விஷயத்தில் முதல்வரே நேரடியாக தலையிட்டு, நீதிபதி ஹேமா தலைமையில் ஒரு கமிட்டி அமைத்து, ஒவ்வொரு நடிகையிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு  அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. 

மலையாளம்


பொதுவாக அனைத்து திரையுலகிலும் இந்த "அட்ஜஸ்ட்மென்ட்" என்ற விஷயம் தவிர்க்கமுடியாதது.கேரள திரையுலகில், நடிக்க வரும் பெண்களிடம், வாய்ப்புக்கு இணையான பாலியல் சேவைகளை வழங்க வற்புறுத்தும் விஷயம் அதிக அளவில் நடந்துள்ளதாக தெரிகிறது.  உண்மை நிலவரம் என்ன என்பது வெளியாகும் வரை, யாரையும் குற்றவாளியாக உறுதிப்படுத்த முடியாது.   
இந்த விஷயத்தில் முதலில் தைரியமாக தனக்கு நடந்ததை கூறிய நடிகை ரேவதி சம்பத் தான். இவர் மலையாள திரை உலகில் நல்ல பல திரைப்படங்களில் நடித்தவர். இவர் அளித்த தகவலில்  ”2016ம் ஆண்டு பிரபல மலையாள திரை உலக நடிகர்  சித்திக், தன்னை ஒரு ஹோட்டலுக்கு வரச் சொன்னதாக கூறியுள்ளார்.  ஹோட்டலுக்கு சென்ற தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து, அதை வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டல் விடுத்ததாகவும்  கூறினார். அதே போல்  நடிகர் ரியாஸ் கான், தன்னிடம் அத்துமீறியதாகவும் தனது புகாரில் கூறியிருந்தார்.
மேற்கு வங்கத்தை சேர்ந்த ஸ்ரீலேகா மித்ரா இயக்குனர் ரஞ்சித் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார். கேரள சினிமா அகாடமியின் தலைவராக பதவி வகித்து வந்த அவர், ஒரு திரைப்பட படப்பிடிப்பின்போது தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக புகார் கூறியுள்ளார்.  

 

மலையாளம்
சோனியா மல்ஹார் "அவர் ஒரு பிரபல நடிகர், அந்த திரைப்படத்தில் நான் நடித்த போது  பாலியல் ரீதியாக அத்துமீறினார். அவருடைய தொல்லை தாங்காமல் எனக்கு அழுகை வந்தது, அதை கண்ட அவர் என்னை சமாதானப்படுத்தி, என்னிடம் மன்னிப்பு கேட்டார்". அத்துடன் "இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். இந்த விஷயத்தை எனது கணவரிடம் சொல்லும் போது கொதித்த அவர், உடனடியாக காவல் நிலையம் சென்று அவர் மீது புகார் கொடுக்கலாம் வா என்று என்னை அழைத்தார்.  
நடிகை கீதா விஜயன் மற்றும் நடிகை ஸ்ரீதேவிகா ஆகிய இருவரும் புகார் கொடுத்தது, துளசிதாஸ் என்ற இயக்குனர் மீது. கேரள சினிமாவில்  துளசிதாஸ், மிக மூத்த மற்றும் பல இளம் இயக்குனர்களுக்கு ரோல் மாடலாக திகழ்ந்துவரும் இயக்குனரும் கூட. அத்துடன்  நடிகர் ஜெயசூர்யா, ஒரு முறை தான் கழிவறைக்கு சென்று வெளியே வந்த பொழுது, பின்னால் இருந்து தன்னை கட்டி அணைத்து முத்தமிட்டதாகவும், தன்னிடம் அத்துமீறியதாகவும் நடிகை மினு கூறியிருந்தார். 
அடுத்தடுத்து  18 நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது இப்பொது மலையாள திரையுலக நடிகைகள் பாலியல் புகார் அளித்துள்ளனர். இதனால் மலையாள திரையுலகின் AMMA சங்க உறுப்பினர்கள் 17 பேரும் பதவி விலகியுள்ளனர். இந்நிலையில், விசாரணை முடிவு என்னவாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web