சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு இலவச வைபை வசதி... பிஎஸ்.என்.எல். அதிரடி அறிவிப்பு!
கார்த்திகை மாதம் சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதால் திரும்பும் திசையெல்லாம் ஐயப்ப கோஷங்கள் தான். ஐயப்ப பக்தர்களுக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. அந்த வகையில் சபரிமலை செல்லும் பக்தா்களுக்காக, 48 இடங்களில் இலவச வைஃபை வசதியை பி.எஸ்.என்.எல் நிறுவனம் அளித்துள்ளது.
இது குறித்து பிஎஸ்என்எல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “ பிஎஸ்என்எல் நிறுவனம் திருவிதாங்கூா் தேவசம் வாரியத்துடன் இணைந்து இந்தச் சேவையை வழங்கி வருகிறது.அதன்படி நிலக்கல்லில் 13, பம்பையில் 12, சன்னிதான வளாகப் பகுதியில் 23 என மொத்தம் 48 இடங்களில் வைஃபை வசதிக்கான கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. பக்தா்கள் எந்த கைப்பேசி இணைப்பைப் பெற்றிருந்தாலும் வைஃபை இணைப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
முதல் அரைமணி நேரத்துக்கு இலவசமாகவும், அதன்பிறகு குறிப்பிட்ட தொகையைச் செலுத்தியும் சேவையைப் பெறலாம் எனக் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் சபரிமலையில் சுகாதாரமற்ற, தரமற்ற உணவுப் பொருள்கள் விற்பனை குறித்து உணவு பாதுகாப்புத் துறையினருக்கு புகாா் தெரிவிக்கலாம் எனவும் சன்னிதான வளாகத்தில் இருப்போா் 7593861767 என்ற எண்ணையும், பம்பையில் இருப்போா் 8592999666, நிலக்கல்லில் இருப்பவா்கள் 75938 61768 என்ற எண்ணையும் பயன்படுத்தி புகாா்களைத் தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளது. மேலும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும் 18004251125 பயன்படுத்தலாம் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது .