போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது வன்முறை

 
போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது வன்முறை

துணை முதல்வர் கேசவ் மவுரியா மற்றும் அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோரின் வருகைக்கு எதிராக போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது வன்முறை நிகழ்ந்துள்ளது.

லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில், உத்தரப்பிரதேச மாநில துணை முதல்வர் கேசவ் மவுரியா மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா வருகைக்கு எதிராக போராட்டம் செய்த, நிகழ்வு பெரும் வன்முறை சம்பவமாக மாறியுள்ளது. இதில் உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் கார் ஏறி இறங்கியதில் 3 விவசாயிகள் கொல்லப்பட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த வன்முறையில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது வன்முறை

இந்த சம்பவத்தை பற்றி சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியதாவது., “ உத்திரபிரதேசத்தில் விவசாயிகள் மேல் நிகழ்ந்த வன்முறை சம்பவத்துக்கு பொறுப்பேற்று, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் என கூறியுள்ளார்

ராகுல் காந்தி தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார் ‘உ.பி. விவசாயிகள் போராட்டத்தில் மனிதத்தன்மையற்ற படுகொலை நிகழ்ந்திருப்பதை கண்ட பின்பும் ஒருவர் அமைதி காத்தால் அவர் செத்துப்போனதற்குச் சமம்’ என்று கூறியுள்ளார்

From around the web