தென்னாப்பிரிக்க கிரிக்கெட் ஜாம்பவான் மைக் ப்ராக்டர் காலமானார்!

 
ப்ராக்டர்

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியில், வேகப்பந்து வீச்சாளராக இருந்து வந்த மைக் ப்ராக்டர், 401 முதல் தர போட்டிகளில் விளையாடி 21,936 ரன்களை எடுத்துள்ளதுடன் 36.01 பேட்டிங் சராசரி வைத்திருக்கிறார். 

ப்ராக்டர் தரமான வேகப்பந்து வீச்சாளராகவும், நன்றாக அடித்து விளையாடி ரன்களைக் குவிப்பவராகவும் இருந்தாலும் நிறவெறி காரணமாக தென்னாப்பிரிக்காவில் தனிமைப்படுத்தப்பட்டதால் அவரது சர்வதேச வாழ்க்கை தடுமாறியது.


தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முதல் பயிற்சியாளரும், இங்கிலாந்து கவுண்டி க்ளூசெஸ்டர்ஷையரின் வீரருமான மைக் ப்ராக்டர் நேற்று தனது 77 வயதில் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். "உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் திடீரென இதய பாதிப்பு காரணமாக மயக்கமடைந்தவருக்கு அதன் பிறகு நினைவு திரும்பவேயில்லை என்று அவரது மனைவி மெரினா தெரிவித்துள்ளார். 

சர்வதேச அளவில் நீங்கள் ஒரு கிரிக்கெட் வீரராக நிறைய சாதித்திருக்க முடியும்? நிறவெறி மற்றும் மோசமான அரசியல் காரணமாக நீங்கள் அதில் தோல்வியடைந்திருக்கிறீர்கள் என்பது நிஜம் தானே? அந்த வருத்தம் இருக்கிறதா என்று நிருபர் ஒருவர் நேர்காணலில் கேள்வியெழுப்பினார்.  ப்ராக்டர், ஒரு வினாடி கூட யோசிக்கவில்லை. கொஞ்சமும் தாமதிக்காமல், ‘நான் தோற்கவில்லை... ஆமாம்... உங்கள் பார்வையில் அது தோல்வி தான். சர்வதேச கிரிக்கெட்டராக ஜெயித்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? சர்வதேச கிரிக்கெட் ஜாம்பவான் என்கிற பெயர் கிடைத்திருக்கும். ஆனால், என் இனத்தின் மக்கள் கடந்த 40 ஆண்டுகளாக அவர்களின் வாழ்க்கையைத் தொலைத்திருக்கிறார்கள். இந்த நிறவெறி காரணமாக அவர்கள் எவ்வளவோ இழந்திருக்கிறார்கள். அது பற்றி எல்லாம் யாரும் இவ்வளவு பேசியிருக்க மாட்டார்கள். நான் ஒதுக்கப்பட்டதால் தானே இது குறித்த பேச்சு எழ துவங்கியிருக்கிறது. அதனால், அதை விட எனக்கு இது தான் முக்கியம். அந்த வகையில் நான் ஜெயித்திருக்கிறேன்” என்றார்.  1979ம் ஆண்டு ஆறு பந்துகளில் தொடர்ச்சியாக ஆறு சிக்ஸர்களை விளாசியவர். அதே பவுலரின் அடுத்த ஓவரிலும், ஆறு பந்துகளில் தொடர்ந்து ஆறு சிக்ஸர்கள் விளாசி மைதானத்தை ஸ்தம்பிக்க வைத்தவர் ப்ராக்டர். 5 பந்துகளில் அடுத்தடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தியவர். அவரது 13 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுக்கள் வீழ்த்தியது சிறந்த பந்து வீச்சாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ப்ராக்டர்

கடந்த 1991ல் மீண்டும் ப்ராக்டர் திரும்பியதும், அவர் அணியை பயிற்சியாளராக வழிநடத்தினார், அதற்கடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைப்பெற்ற உலகக் கோப்பைப் போட்டியின் போது, தென்னாப்பிரிக்க அணியை அரையிறுதி போட்டிக்கு அழைத்துச் சென்றார். பின்னர் அவர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் போட்டி நடுவர்கள் குழுவில் நியமிக்கப்பட்டார் மற்றும் தென்னாப்பிரிக்காவின் தேர்வாளர்களின் அழைப்பாளராகவும் பணியாற்றினார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

 

From around the web