குட் நியூஸ்... நாளை முதல் வேளச்சேரி கடற்கரை இடையே முழுமையான ரயில் சேவை மீண்டும் தொடக்கம்!
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் பறக்கும் ரயில் சேவை 14 மாதங்களாக பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே ரத்து செய்யப்பட்ட நிலையில் நாளை முதல் முழுமையாக இயக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. ரயில் பயணிகள் இந்த செய்தி தீபாவளிக்கு தித்திப்பான செய்தியாக வந்திருப்பதாக பெரும் உற்சாகம் தெரிவித்துள்ளனர்.
வடசென்னையிலிருந்து வேளச்சேரி பகுதிகளில் பணிபுரிபவர்கள் ஒரே ரயிலில் இதுவரை பயணித்து வந்த நிலையில், கடற்கரை - சிந்தாதிரிப்பேட்டை இடையே பறக்கும் ரயில் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து ரயில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்த துயரத்துக்கு நாளை முதல் விடிவு காலம் அந்த வகையில் சென்னை கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை வழக்கம் போல செயல்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை கடற்கரை - எழும்பூர் இடையேயான ரயில் பாதை அமைக்கும் பணிக்காக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் தேதியுடன் இந்த சேவை கடற்கரை - சிந்தாதிரிப்பேட்டை இடையே ரத்து செய்யப்பட்டது.
ரயில் சேவை நிறுத்தப்பட்டபோது, ஏழு மாதங்களில் பணி முடிந்து ஏப்ரல் மாதம் 1ம் தேதி மீண்டும் ரயில் சேவை தொடங்கும் என கூறப்பட்டது. பிறகு பணியில் ஏற்பட்ட தொய்வு காரணமாக அக்டோபர் 1ம் தேதிக்குள் பணி நிறைவடையும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், பணி நிறைவடையாமல் நீட்டித்துக்கொண்டே இருந்ததால் மக்கள் கடும் அவதியடைந்தனர். தற்போது பணி முடிந்து வழக்கம் போல ரயில் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.எழும்பூர் - கடற்கரை இடையே புதிய ரயில் பாதை அமைக்கும் பணி நிறைவடைந்ததால், இந்த வழித்தடத்தில் ரயில்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருவள்ளூர், அரக்கோணம், ஆவடியிலிருந்து வருவோர் வழக்கமாக வேளச்சேரி செல்லும் பறக்கும் ரயிலில் ஏறிவிட்டால் போதும். அவர்கள் சென்னை சென்ட்டிரல் செல்லும் ரயிலில் வந்து இறங்கி, அங்கிருந்து சிந்தாதிரிப்பேட்டை செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
நாளை முதல், ஒரே ரயிலில், அரக்கோணம், ஆவடியிலிருந்து வேளச்சேரி வரை பயணிக்கலாம்