இன்று முதல் மதுரை-விஜயவாடா இடையே விமான சேவை துவக்கம்... பயணிகள் மகிழ்ச்சி!

இன்று மார்ச் 30ம் தேதி முதல் மதுரை-விஜயவாடா இடையே விமான சேவை தொடங்கப்பட உள்ள நிலையில், பயணிகளிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இது நாள் வரையில் மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, ஐதராபாத், டெல்லி, மும்பை போன்ற நகரங்களுக்கு நேரடி உள்நாட்டு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. மதுரை விமான நிலையத்தில் இருந்து விஜயவாடாவிற்கு பெங்களூரு, ஐதராபாத், சென்னை வழியாக விமானங்களை இயக்கி வரும் தனியார் விமான நிறுவனம், மேற்கண்ட இடங்களில் இறங்கி பின்னர் வேறு விமானத்திற்கு மாறி விஜயவாடா செல்ல வேண்டும்.
இந்நிலையில் இன்று மார்ச் 30ம் தேதி முதல் மதுரையிலிருந்து பெங்களூரு வழியாக அதே விமானத்தில் இறங்காமல் பெங்களூருவில் 30 நிமிடம் காத்திருந்த பின்னர் விஜயவாடாவிற்கு குறைந்த நேரத்தில் பயணம் செய்ய அந்த தனியார் விமான சேவை வழங்க இருக்கிறது.
அதன்படி மதுரையில் இருந்து காலை 8.15 மணிக்கு புறப்படும் விமானம் காலை 9.45 மணிக்கு பெங்களூரு செல்லும். அங்கு அரை மணி நேரத்திற்கு பின்னர் 10.15 மணிக்கு புறப்பட்டு காலை 11.55 மணிக்கு விஜயவாடா சென்றடையும்.
மறுமார்க்கமாக மாலை 5.40 மணிக்கு விஜயவாடாவிலிருந்து புறப்பட்டு இரவு 7.25 மணிக்கு பெங்களூரு வந்தடையும். அங்கு அரை மணி நேரம் கழித்து இரவு 7.55 மணிக்கு புறப்பட்டு இரவு 9.20 மணிக்கு மதுரை வந்தடையும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?