234 தொகுதிகளிலும் கொடியேற்ற அறிவுரை... ரசிகர்கள் உற்சாகம்!
இன்று தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தங்களுக்கு சொந்தமான இடங்களில், வீடுகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை ஏற்ற விஜய் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படும் நிலையில், காலை முதலே விஜய் ரசிகர்களும், தவெக தொண்டர்களும் தங்களது இல்லங்களில் தவெக கொடியை ஏற்றி வருகின்றனர்.
சிவப்பு, மஞ்சள் ஆகிய இரு நிறங்களுடன் இரண்டு போர் யானைகள், நடுவில் வாகை மலருடன் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை விஜய் அறிமுகம் செய்து வைத்திருந்தார். இந்நிகழ்வில் விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் ஷோபா சந்திரசேகர் இருவரும் கலந்து கொண்டனர்.
கொடியை அறிமுகப்படுத்தியதில் இருந்தே சர்ச்சைகளும் வலம் வரத் துவங்கியது. விஜய் கட்சிக் கொடியில் யானைகள் இருந்ததைக் கண்டு பகுஜன் சமாஜ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இன்னொரு பக்கம் பெவிக்கால் லோகோவைத் திருப்பி போட்டதைப் போல இருக்கிறது என்று மீம்ஸ்கள் பறந்தன. கேரள மாநில சாலை போக்குவரத்து துறையினரின் சின்னம், ஸ்பெயின் நாட்டு தேசிய கொடி என்று பலவாறு மீம்ஸ்களும், எதிர்ப்புகளும் கிளம்பிய நிலையில், இதே கொடியை தமிழகத்தின் 234 மாவட்டங்களிலும் ஏற்றச் சொல்லி அறிவுறுத்தப்பட்டிருப்பது, இது தான் தனது கட்சிக் கொடி என்பதில் விஜய் உறுதியாக இருப்பது தெளிவாகிறது.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா