போட்றா வெடிய... சேலத்தில் தவெக முதல் மாநாடு?... பட்டைய கிளப்ப தயாராகும் தொண்டர்கள்!

 
தவெக
 

நடிகர் விஜய் சமீபத்தில்  தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கினார். கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாகிகள் மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள்  மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாட்டை சேலத்தில் நடத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.  இது குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சேலம் மாவட்டம் காக்காபாளையம், தலைவாசல் மற்றும் கெஜல்நாயக்கன்பட்டிஆகிய மூன்று பகுதிகளில் மாநாடு நடத்துவதற்கான திடலை சேலம் மாவட்ட தலைவருடன் சேர்ந்து  பார்வையிட்டார்.

புஸ்ஸி ஆனந்த்
சேலத்தில் மாநாடு நடத்த முடிவு செய்து இடம் தேர்வு செய்யப்படுவதாக பரவலாக கூறப்படுகின்றது, முதல் மாநில மாநாட்டில் சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த  வகையில் திடல் அமைய உள்ளதாகவும், மாநாட்டை செப்டம்பர்  அல்லது நவம்பர் மாதத்தில்  நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


இந்த மாநாட்டில் சிங்கப்பூர், ஸ்ரீலங்கா, கனடா மற்றும் மலேசியா  பகுதிகளில் இருந்தும் ரசிகர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் வர உள்ளனர் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. சேலம் கெஜல்நாயக்கன்பட்டியில் உள்ள திடலில் மாநாடு நடத்த அதிக வாய்ப்புள்ளதாகக்  கூறப்படுகின்றது,  2014 ல்  பாராளுமன்றத் தேர்தல் சமயத்தில் அப்போதைய முதல்வர்  ஜெயலலிதா இப்பகுதியில் பிரச்சாரத்தை தொடங்கினார், அந்த தேர்தலில் அதிமுக 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
அதேபோல தேமுதிக தலைவர் விஜயகாந்த் மாநாடு நடத்திய பிறகு எதிர்க்கட்சித் தலைவரானார். சமீபத்தில் 2024 நாடாளுமன்ற தேர்தல்  அறிவிக்கப்பட்ட நிலையில் பிரதமர் மோடி இந்த திடலில் முதல் பிரச்சாரத்தை தொடங்கினார். அவரும் தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழக கட்சியின் முதல் மாநில மாநாடு இந்த திடலில் நடைபெறக்கூடும் என  எதிர்பார்க்கப்படுகின்றது.

விஜய் மக்கள் இயக்கம்

இதனால் விஜயின் ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் என அனைவரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.   தமிழகத்தின் மைய பகுதியான திருச்சியில் அரசியல் கட்சியினர் ஒரு முறையாவது மாநாடு நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் நடிகர் விஜய் தன்னுடைய தமிழக வெற்றி கழக கட்சியின் முதல் மாநாட்டை திருச்சியில் நடத்துவதற்காக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திருச்சியில் இடத்தை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது.  
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு திருச்சி அல்லது சேலம் என 2 பகுதிகள் தேர்வு செய்யப்படுகின்றது என தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில் எங்கு மாநில மாநாடு நடைபெறும் என ரசிகர்கள் மத்தியிலும் கட்சி நிர்வாகிகள் மத்தியிலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web