பட்டாசு ஆலை வெடிவிபத்து... உரிமையாளர் உடல் சிதறி பலி!! 3 பேர் படுகாயம்!!

 
பட்டாசு விபத்து

நாகப்பட்டினம்  மாவட்டம் வேதாரண்யம் அருகே  ஆயக்காரன்புலம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான  ஆஞ்சனேயா பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. நேற்று மாலை  இந்த ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு பட்டாசுகள் வெடித்து சிதறின. இதில் கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாயின.தொழிற்சாலையின் உரிமையாளர்  கஜேந்திரனின் தந்தை சுப்பிரமணியன் இந்த கோர வெடி விபத்தில் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக  உயிரிழந்தார்.

பட்டாசு விபத்து

அதே போல், பணியில் இருந்த மேரி சித்ரா, கலாவதி, கண்ணன்   3 பேரும் படுகாயம் அடைந்தனர்.தகவல் தெரிவிக்கப்பட்டதும் உடனடியாக  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.  

ஆம்புலன்ஸ்

விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் நாகை அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்த காவல்துறையினர் வெடி விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web