பட்டாசு ஆலை வெடி விபத்து.. பலியோனர் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் இழப்பீடு... முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

 
தூத்துக்குடி விபத்து

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள மேச்சப்பங்குளத்தில் தனியார் பட்டாசு ஆலை உள்ளது. இதை நாசரேத் அருகே உள்ள திருக்கையூரை சேர்ந்த ராம்குமார் என்பவர் 10 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இங்கு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மாலை 5 மணியளவில் பட்டாசுகள் தீப்பிடித்து குடோன் முழுவதும் பரவியது. அதன்பின், அறையில் இருந்த 5 பேரில் ஒருவர் ஓடிவிட்டார். ஸ்ரீவைகுண்டம் அருகே பட்டாசு தயாரிக்கும் போது அரசகுளத்தைச் சேர்ந்த முத்துக்கண்ணன் (21), கந்தசாமிபுரத்தைச் சேர்ந்த விஜய் (25) ஆகியோர் உடல் கருகி உயிரிழந்தனர்.தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்து, ஸ்ரீவைகுண்டம் அருகே புளியங்குளத்தை சேர்ந்த செல்வம் (21), ஆழ்வார்திருநகரி அருகே செம்பூரைச் சேர்ந்த பிரசாத் (20),  சின்னமதிகூடலை சேர்ந்த பெண்கள் செந்தூர்கனி (45), முத்துமாரி (41) ஆகியோரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

முதல்வர் ஸ்டாலின்

இதுகுறித்து நாசரேத் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி எஸ்பி ஆல்பர்ட் ஜான் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இந்நிலையில், வெடி விபத்தில் பலியோனர்களுக்கு தலா 3 லட்சம் இழப்பீடு வழங்குவதாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

From around the web