விருதுநகரில் பட்டாசு ஆலை வெடி விபத்து... ஒருவர் பலி!

 
பட்டாசு
 

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் பலியானார், மற்றொருவர் காயமடைந்தார். இது தொடர்பாக வெம்பக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.விருதுநகர் மாவட்டம்,சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணையை அடுத்துள்ள  குகன்பாறையில் சிவகாசியை சேர்ந்த பாலமுருகன்(50) என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. 

ஆம்புலன்ஸ்

80க்கும் மேற்பட்ட அறைகள் கொண்ட இந்த பட்டாசு ஆலையில் 40க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இந்நிலையில், இன்று காலை வழக்கம் போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்த போது, செவல்பட்டியை சேர்ந்த கோவிந்தராஜ்(25) என்பவர் லோடு ஆட்டோவில் இருந்து மூலப்பொருள்கள் இறக்கி பட்டாசு தொழிற்சாலையிலுள்ள ஒரு அறையில் இறக்கி வைத்துள்ளார். அப்போது உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது.

இதில், தொழிலாளி கோவிந்தராஜ் கட்டிட ஈடுபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். குருமூர்த்தி(20) எனும் மற்றொரு தொழிலாளி இந்த வெடிவிபத்தில் பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

வெடிவிபத்தில் தொழிற்சாலையின் ஒரு அறை இடிந்து தரைமட்டமானது. தகவலறிந்த ஏழாயிரம்பண்ணை, வெம்பக்கோட்டை தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியிலும் மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். பின்னர் ஜேசிபி இயந்திரம் மூலமும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பட்டாசு ஆலை உரிமையாளரான பாலமுருகன் மீது வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web