முதியோர் இல்லத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து.. 10 பேர் பலியான சோகம்.. பலர் படுகாயம்!
ஸ்பெயின் நாட்டின் இராகோசா மாகாணத்தில் உள்ள வில்லஃப்ரான்கா டி எப்ரோவில் உள்ள முதியோர் இல்லத்தில் இன்று அதிகாலை பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சில மணி நேரங்களுக்குள் கடுமையாக போராடி தீயை அணைத்தனர். தீயில் சிக்கி 10 பேர் உயிரிழந்ததாக காவல் அதிகாரி தெரிவித்தனர்.
ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் மேலும் பலர் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதியோர் இல்லத்தில் 82 முதியவர்கள் வசித்து வந்தனர், ஆனால் இறந்தவர்கள் அனைவரும் முதியவர்களா அல்லது அங்கு பணிபுரிந்தவர்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!