அரசு விரைவுப் பேருந்தில் தீவிபத்து... ஓட்டுனரின் சமயோசிதத்தால் 52 பயணிகள் உயிர் தப்பினர்!
தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து நேற்று இரவு 9.50க்கு அரசு விரைவுப் பேருந்து திருச்செந்தூருக்கு சென்று கொண்டிருந்தது. நள்ளிரவு 11 மணிக்கு பேருந்து தாராபுரம் புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட இன்ஜின் கோளாறு காரணமாக பேருந்தில் இருந்து புகை வெளியேறத் தொடங்கியது.
சிறிது நேரத்தில் பேருந்தில் தீ பிடிக்கத் தொடங்கியது. இதனைப்பார்த்து சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர் 55 வயது கணேசமூர்த்தியும், நடத்துனர் சிகாமணியும் உடனடியாக பேருந்தில் பயணம் செய்த 52 பயணிகளையும் அவசர அவசரமாக கீழே இறக்கிவிட்டனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
அடுத்த 10 நிமிடத்திற்குள் தீ மளமளவென பரவி பேருந்து முழுவதும் எரிந்து நாசமானது. பேருந்தில் இருந்த தீயணைப்பான் மூலம் தீயை அணைக்கும் முயற்சியாலும் எந்தப் பலனும் இல்லை. பின்னர் தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 2- மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். பேருந்தில் வந்த 56 பயணிகளும் மாற்றுப் பேருந்தில் ஒரு மணி நேரம் கழித்து அனுப்பி வைக்கப்பட்டனர்.
பின்னர் மாற்றுப் பேருந்து வரவழைக்கப்பட்டு அனைத்து பயணிகளும் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர். தீ விபத்து காரணமாக கோவை, ஈரோடு, திருப்பூர், மதுரை நோக்கி செல்லும் புறவழிச்சாலை மற்றும் சர்வீஸ் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!