பேருந்தில் தீ விபத்து.. குழந்தையை காப்பாற்றி மனைவியை பறிக்கொடுத்த பெரும் சோகம்.!!
டெல்லி - குர்கான் விரைவு சாலையில் சென்று கொண்டிருந்த சொகுசு பேருந்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் தனது 5 மாத குழந்தையை பேருந்தின் சன்னல் வாயிலாக வெளியில் இருந்த பயணிகளிடம் வீசி காப்பாற்றிய தந்தை. இருப்பினும் தன் மனைவியை பறிகொடுத்த சோகம் அரங்கேறியுள்ளது.
உத்திரப்பிரதேசத்தை சேர்ந்தவர் தினேஷ் (45 ). இவர் தீபாவளி பண்டிகையை சென்று கொண்டாடுவதற்காக தனது மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்து கொண்டு சொகுசு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது பேருந்தில் தீடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பேருந்து முழுவதும் தீ பரவ ஆரம்பித்துள்ளது.
அச்சமயம் பேருந்தில் இருந்தவர்கள் வேகமாக தப்பிக்க முயற்சி செய்யவே சன்னல் வாயிலாக வெளியே நின்று கொண்டிருந்த உள்ளூர் வாசிகளிடம் இவரும் தனது 5 மாத குழந்தையை தூக்கி எரிந்துள்ளார். பிறகு பெரும் போராட்டத்திற்கு பிறகு பேருந்தில் இருந்து தப்பித்த அவர் அப்போராட்டத்தில் தனது மனைவியை காப்பாற்ற இயலவில்லை என்று உணர்ந்தார்.மிகவும் அதிர்ச்சி அடைந்த நிலையில் இது குறித்து கூறிய தினேஷ், “எப்படி காப்பாற்றுவது என்று எனக்கு தெரியவில்லை. நாங்கள் எங்கள் குழந்தைகளுடன் தீபாவளியை உத்திரபிரதேசத்தில் கொண்டாடுவதற்காக சென்று கொண்டிருந்தோம். என் மனைவி இளைய மகள் தீபாலியையும் நான் எனது 5 வயது குழந்தையையும் வைத்திருந்தோம்.
எனது மூத்த மகள் அல்கா என் அருகில் அமர்ந்திருந்தாள். அப்போது பேருந்து முழுவதும் புகை பரவி தீ பரவ ஆரம்பித்தது. அருகில் இருந்தவர்கள் ஜன்னலை உடைத்து வெளியேர முயன்றனர். நானும் எனது கையில் இருந்த டிபன் பாக்ஸை எடுத்து ஜன்னலை உடைத்து எனது 5 வயது குழந்தையை வெளியில் இருந்தவர்கள் பிடிக்கும் வகையில் வீசினேன்.” என்று தெரிவித்தார். இவரது மூத்த மகள் அல்கா சிறு காயங்களுடன் மருத்துவமமையில் சிகிச்சை பெற்றார்.
பிறகு இவ்விபத்தில் உயிரிழந்த சடலம் ஒன்றை தினேஷிடம் காட்டி அவரது மகள் தீபாலியா என்று சந்தேகித்தனர், ஆனால் அவர்கள் காட்டியதோ 20-25 வயது நிரம்பிய பெண். இது குறித்து தெரிவித்த தினேஷ், “ அவர்கள் என்னிடம் காட்டியது என் தீபாலியின் உடல் அல்ல. அவள் வேறு எங்கோ இருக்கிறாள். இறந்தவர் என் குழந்தையாக இருக்க முடியாது. ஏனெனில் தீபாலிக்கு வெறும் 5 வயது தான் . ஆனால் அவர்கள் காட்டியதோ ஒரு இளம் பெண்ணின் உடல்.” என்று வேதனையோடு தெரிவித்தார்.
இப்பயங்கர தீவிபத்தில் 12 பேர் காயமடைந்தனர், மேலும் 3 பலத்த தீக்காயங்களுடன் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையிலும் மீதமுள்ளவர்கள் குர்கானின் சிவில் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 2 பேர் உயிரிழந்துள்ளனர். புதன்கிழமை உத்தரப்பிரதேச மாநிலம் ஹமிர்பூரை சென்றவடைவதற்காக தாமதமாக புறப்பட்ட இந்த பேருந்து இரவு 8:20 மணியளவில் செக்டார் 31 மேம்பாலத்தில் தீப்பிடித்தது. 40 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த இப்போருந்தில் 5 kg சிலிண்டர் ஒன்று ஏற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவே தீவிபத்துக்கு காரணமாக இருந்திருக்குமா? என்று சந்தேகிக்கப்படுகிறது.