டாடா தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து... 4 மணிநேரம் போராடிய தீயணைப்பு வீரர்கள்!

 
 டாடா தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கெலமங்கலம் திம்ஜேப்பள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கூத்தனபள்ளி கிராமத்தில் உள்ள டாடா நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன் உதிரி பாகங்கள் தயார் செய்யும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சுமார் 20,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வரும் இந்த தொழில் சாலையில் உள்ள கெமிக்கல் ஆனோ பிளாண்டில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

 டாடா தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

தீ விபத்தால் தொழிற்சாலையின் உள்ளிருந்த  லட்சக்கணக்கான மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. அந்த பகுதி முழுவதுமே தீ விபத்தால் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. 

முதற்கட்டமாக தீயை அணைக்க தொழிற்சாலையில் உள்ள தீயணைப்பு வாகனத்தைக் கொண்டு தொழிலாளர்கள் முயற்சிகளை மேற்கொண்ட நிலையில், தீயைக் கட்டுப்படுத்த முடியாமல் ராயக்கோட்டை மற்றும் தேன்கனிக்கோட்டை பகுதியில் இருந்து தீயணைப்பு வாகனங்கள்  வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்றது. 

 டாடா தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

இந்த தீ விபத்தில் தொழிற்சாலையின் உள்ளே பணியில் இருந்த தொழிலாளர்கள் உட்பட யாருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து ராயக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கெமிக்கல் யூனிட்டில் தீ விபத்து என்பதால், தீ விபத்தில் எவ்வளவு மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமானது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

From around the web