நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ... முதியோர் இல்லத்தில் திடீர் தீவிபத்து... 10 பேர் உடல் கருகி பலி... 2 பேர் படுகாயம்!

 
ஸ்பெயின்

 ஸ்பெயின் நாட்டில்  சராகோசாவில் அமைந்துள்ள  முதியோர் இல்லத்தில் இன்று நவம்பர் 15ம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் 10பேர் உடல் கருகி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.  2 பேர் படுகாயம் அடைந்தனர்.  அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


 இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை தெரியவில்லை என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனிடையே தீவிபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஸ்பெயின்

தீ விபத்து நடந்த சமயத்தில் அந்த முதியோர்  இல்லத்தில் 82 பேர் இருந்துள்ளனர். இந்த இல்லத்தில் முதியவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களும் பராமரிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web