மின்கசிவால் திடீர் தீவிபத்து... 10 வீடுகள் தீயில் கருகி சாம்பல்... கதறும் குடியிருப்புவாசிகள்!
கேரள மாநிலம் மூணாறில் நேற்று திடீரென நிகழ்ந்த தீவிபத்தில் 10 வீடுகள் கருகி சாம்பலாகின. மூணாறிலிருந்து 12 கிமீ தொலைவில் அமைந்துள்ள நெற்றிக்குடி எஸ்டேட் சென்ட்ரல் டிவிஷனில் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் 11 வரிசை வீடுகளைக் கொண்ட லயன்ஸ் குடியிருப்பில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு திடீரென ஒரு வீட்டில் தீப்பற்றியது.
அப்போது, புகை மண்டலம் ஏற்பட்டதால் அக்கம் பக்கத்தினர் வீட்டை விட்டு ஓடி வந்தனர். அத்துடன் அருகில் வசிப்பவர்களையும் எழுப்பி வீட்டிலிருந்து வெளியேற்றினர். அதே நேரத்தில் ஆபத்திலிருந்து தப்பித்த மற்றவர்கள் குடியிருப்பு பகுதிகளில் பற்றி எரிந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைக்க முற்பட்டனர். ஆனால் அதற்குள் அடுத்தடுத்த வீடுகளுக்கும் மளமளவென தீ பரவி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.
உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் தீயணைப்பு வண்டி வந்து சேர்வதற்குள் 10 வீடுகள் எரிந்து முற்றிலும் சாம்பலாகின. வீட்டில் இருந்த பணம், முக்கிய பொருட்கள், ஆவணங்கள் அனைத்துமே தீயில் கருகின. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். மின்கசிவு காரணமாக தீப்பிடித்திருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!