தமிழகம் முழுவதும் 364 இடங்களில் தீவிபத்து...!!

 
பட்டாசு விபத்து

நாடு முழுவதும் நேற்று நவம்பர் 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை  தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தீபாவளியை புத்தாடை பட்டாசு, இனிப்புக்கள் என உற்சாகமாகக் கொண்டாடித் தீர்த்தனர்.  இந்நிலையில், பட்டாசு வெடித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தீ விபத்து சம்பவங்களும் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

 ராஜேந்திர நகரில் பட்டாசு விபத்து

தமிழகத்தில் நேற்று 364 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.பட்டாசு வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாக 254 இடங்களில் இருந்து தீயணைப்பு துறைக்கு அழைப்பு வந்ததாகவும், 110 இடங்களில்  தீ விபத்துகள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டாசு

குறிப்பாக, சென்னையில் மட்டும் தீபாவளி நாளில் மொத்தம் 102 இடங்களில் பட்டாசுகளால் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இதில் 9 இடங்களில் மட்டும்  மற்ற வகை தீ விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. தீ விபத்தால் உள்நோயாளிகளாக 47 பேரும், புறநோயாளிகளாக 622 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web