அல்வா கிண்டிய நிதியமைச்சர் | வேகமெடுக்கும் மத்திய பட்ஜெட் பணிகள்!

 
நிர்மலா சீதாராமன்

மத்திய பட்ஜெட் 2024-25 ஜூலை 23ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக அல்வா கிண்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அனைவருக்கும் பரிமாறினார்.

நிர்மலா சீதாராமன்
2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு இன்னும் ஒரு வாரம் கூட இல்லாத நிலையில், பட்ஜெட் தயாரிப்பின் இறுதிக்கட்டத்தைக் குறிக்கும் வகையில், நேற்று ஜூலை 16ம் தேதி நார்த் பிளாக் அடித்தளத்தில் அல்வா விழாவை நிதித் துறை ஏற்பாடு செய்திருந்தது. 
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, நிதியமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் பட்ஜெட் தொகுப்பில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் இந்த அல்வா கிண்டும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நிர்மலா சீதாராமன் அல்வாவை அனைவருக்கும் பரிமாறினார். 

நிர்மலா சீதாராமன்
ஒவ்வொரு முறையும், நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன் அல்வா கிண்டும் விழா கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த முறையும் அல்வா கிண்டும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. 
நடப்பு 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் 23ம் தேதி தாக்கல் செய்ய உள்ளார்.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web