மனைவியுடன் சண்டை.. விரக்தியில் தலைமைக் காவலர் விஷம் குடித்து தற்கொலை!
ஈரோடு மாவட்டத்தில் காவல் நிலைய தலைமைக் காவலர் வெங்கடேசன் (50) விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெங்கடேசன் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் குடி போதைக்கு அடிமையாகி இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை குடிபோதையில் வீட்டுக்கு வந்த வெங்கடேசன், மனைவி பிரபாவதியிடம் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. தகராறு காரணமாக மனமுடைந்த வெங்கடேசன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
கணவரிடம் கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்குச் சென்ற பிரபாவதி, சமீபத்தில்தான் வீடு திரும்பினார். தம்பதிக்கு இடையே ஏற்பட்ட தகராறு தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!