கின்னஸ் சாதனை... 667 முறை மகளின் பெயரை பச்சை குத்திய தந்தை!!

 
லூசி

பல்வேறு துறைகளிலும் கின்னஸ் சாதனைக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக திறமைகளை நிரூபிக்க பலரும் வித்தியாசமான முறைகளிலும், வகைகளிலும் சாதனை படைக்க தொடங்கியுள்ளனர்.    அந்த வகையில் இங்கிலாந்தை சேர்ந்த ஒருவர் தனது மகளின் பெயரை உடலில் 667 முறை பச்சை குத்தியதற்காக  கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

லூசி

 இங்கிலாந்தில் வசித்து வரும்  மார்க் ஓவன் எவன்ஸ்க்கு தன் மகள் மீது பிரியம் அதிகம். இவருக்கு வயது  49. இவர் தனது மகளான லூசியின் பெயரை 2017லேயே  267 முறை பச்சை குத்தியிருந்தார்.  இந்நிலையில் 2020ல்  அமெரிக்காவில் வசித்து வரும்   டீட்ரா விஜில்  தனது பெயரை உடலில் 300 முறை பச்சை குத்தி மார்க் ஓவன் எவன்ஸ்சின் சாதனையை முறியடித்தார்.

லூசி

இதனையடுத்து   எவன்ஸ் விஜிலின் சாதனையை முறியடித்து மீண்டும் சாதனை படைக்க திட்டமிட்டார்.   அதன் அடிப்படையில் 2 டாட்டூ கலைஞர்கள் மூலம் தனது உடலின் முழுப்பகுதியிலும் மகளின் பெயரை 667 முறை பச்சை குத்தி கின்னஸ் சாதனை படைத்தார்.  இதுகுறித்து ” இந்த சாதனையை எனது மகளுக்கு அர்ப்பணிக்கிறேன்” எனக் கூறியுள்ளார். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web