விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து பயங்கர கொள்ளை.. 40 சவரன் நகை அபேஸ்.. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!

 
மேகநாதன்

மதுராந்தகம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் நகை திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கருங்குழி பகுதியை சேர்ந்தவர் விவசாயி மேகநாதன். இவர் தனது மகளின் மருத்துவ சிகிச்சைக்காக சென்னை அண்ணாநகரில் உள்ள மருத்துவமனைக்கு சென்றிருந்தார். இதையடுத்து இன்று காலை வீட்டுக்கு வந்த அவர் கதவை திறக்க முயன்றார்.

பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு மேகநாதன் அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோக்கள் உடைக்கப்பட்டு 40 சவரன் நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து மதுராந்தகம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மதுராந்தகம் போலீசார் கைரேகை நிபுணரை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர். இதையடுத்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web