கதறும் விவசாயிகள்... ஒரு கிலோ தக்காளி ரூ.1.50க்கு கொள்முதல் செய்யும் வியாபாரிகள்!

 
தக்காளி

தக்காளி விளைச்சலும், வரத்தும் அதிகரித்து உள்ள நிலையில், உள்ளூர் விவசாயிகளிடம் ஒரு கிலோ தக்காளியை ரூ.1.50க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்வதால், வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக ஓசூர் பகுதி விவசாயிகள் வேதனையுடன் கவலைத் தெரிவித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பாகலூர், பேரிகை, கெலமங்கலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவுக்கு மேல் தக்காளி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதியில் அறுவடையாகும் தக்காளியை வியாபாரிகள் நேரடியாகக் கொள்முதல் செய்து கர்நாடக மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். கடந்தாண்டு தக்காளி வரத்து குறைந்ததால் ஒரு கிலோ ரூ.200 வரை விற்பனையானது.

மீண்டும் உச்சம் தொட்ட தக்காளி விலை !!

அதேபோல, நிகழாண்டும் தக்காளிக்கு அதிக விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் ஓசூர் பகுதிகளில் விவசாயிகள் அதிக பரப்பளவில் தக்காளி சாகுபடியில் ஈடுபட்டனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு கிலோ தக்காளி ரூ.80 வரை விற்பனையானது. இதையடுத்து, வெளி மாநில தக்காளியை வியாபாரிகள் கொள்முதல் செய்து, ஓசூர் பகுதியில் விற்பனை செய்து வருகின்றனர். இதனால், தக்காளி விலை படிப்படியாக குறைந்தது. தற்போது, சந்தைக்கு உள்ளூர் மற்றும் வெளிமாநில தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதனால், ஒரு கிலோ தக்காளியை ரூ.1.50-க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். சில்லறை விற்பனையில் கிலோ ரூ.8 முதல் ரூ.10 வரை விற்பனையாகிறது.

தக்காளி

இது தொடர்பாக விவசாயிகள் கூறியதாவது: வெளி மாநிலம் மற்றும் உள்ளூர் பகுதியிலிருந்து சந்தைக்குத் தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதனால், 22 கிலோ கொண்ட ஒரு கிரேடு தக்காளியை வியாபாரிகள் ரூ.33-க்கு கொள்முதல் செய்கின்றனர். அறுவடை கூலி கூட கிடைக்காமல், வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. சந்தை தேவைக்கு அதிகமாக வரத்து இருப்பதால், காலையில் முதலில் வரும் தக்காளி மட்டும் விற்பனையாகிறது. மற்றவை விற்பனையாகாமல் தேங்கிவிடுகின்றன. இப்படி விற்பனையாகாமல் வீணாகும் தக்காளியை நீர் நிலைகளில் உள்ள மீன்களுக்கு உணவாக கொட்டி வருகிறோம்” என்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

 

From around the web