ரசிகர்கள் கொண்டாட்டம்... ராம் சரண் RC16 ஃபர்ஸ்ட் லுக்!

தென்னிந்திய திரையுலகில் குளோபல் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர்' ராம் சரண். இவரது நடிப்பில் 16வது திரைப்படமாக உருவாகி வரும் படத்திற்கு 'பெடி ' என வித்தியாசமான டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
ராம் சரண் இன்று தன்னுடைய 40வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், இவர் தேசிய விருது பெற்ற 'உப்பென்னா ' படத்தின் இயக்குநர் புச்சிபாபு சனா இயக்கத்தில், நடித்து வரும் 16 வது படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
பெடி என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில், ராம் சரண் மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருப்பதாக படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இயக்குநர் புச்சிபாபு, மிகவும் கவனமாக ராம் சரண் கதாபாத்திரத்தை உருவாக்கி உள்ளது, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் தெளிவாக தெரிகிறது. ராம் சரணின் தோரணையே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்களுக்கு கூட்டியுள்ளது.
ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும்வகையில் 'பெடி' படத்தில் இருந்து இரண்டு போஸ்டர்களை படக்குழு ரிலீஸ் செய்துள்ளது. ஒரு லுக்கில் மிகவும் முரட்டுத் தனத்துடனும், இன்னொரு போஸ்டரில், பீடி பிடித்துக்கொண்டு, மாஸான லுக்கிலும் காணப்படுகிறார். இந்த இரு போஸ்டர்களும் தற்போது வைரலாகி வருகிறது.
இந்த திரைப்படம், ராம் சரணை கேம் சேஞ்சர் தோல்வியில் இருந்து தேற்றும் ஒரு படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில், ராம் சரணுக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்க ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய, தேசிய விருதினை பெற்ற நவீன் நூலி படத்தொகுப்பு பணிகளை கவனித்துக் கொள்கிறார். இப்படத்தின் தயாரிப்பு வடிவமைப்பாளராக அவினாஷ் கொல்லாவும் இணைந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!