பிரபல தயாரிப்பாளர் காலமானார்... திரையுலகில் அடுத்தடுத்து சோகம்!!
தெலுங்கு திரையுலகில் மூத்த திரைப்படத் தயாரிப்பாளர் கோகினேனி பிரசாத். இவர் உடல் நலக்குறைபாடு மற்றும் வயது மூப்பு காரணமாக காலமானார். இவருக்கு வயது 73. இவர் தென்னிந்தியத் திரைப்படத் துறையில் இவர் டப்பிங் இன்ஜினீயராகவும் பணிபுரிந்தவர். நேற்று மாலை 5 மணிக்கு ஹைதராபாத்தில் அவரது இல்லத்தில் அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரசாத்தின் மகன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. அவரது இறுதி சடங்குகள் இன்று ஜூப்ளி ஹில்ஸ் மகாபிரஸ்தானத்தில் நடைபெறுவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.இவர் 1984ல் தாதிநேனி பிரசாத் இயக்கத்தில் ’பல்நதி புலி’ படத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்தார்.
சாய் சக்ரா புரொடக்க்ஷன்சுடன் இணைந்து கதை அமைப்பில் கோகினேனி பிரசாத் முக்கிய பங்கு வகித்திருந்தார். இப்படத்தில் பாலகிருஷ்ணாவுடன் பானுப்ரியாவும் நடித்திருந்தார். இது தவிர, பிரசாத் 1986ம் ஆண்டு ’ஸ்ரீ ஷீரடி சாய்பாபா மஹாத்யம்’ படத்தையும் தயாரித்தார். இந்த திரைப்படம் 175 நாட்கள் திரையரங்குகளில் ஓடி மெகாஹிட் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!