சோகம்... பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் அன்ஷுமான் கெய்க்வாட் காலமானார்!
பிரபல இந்திய கிரிக்கெட் வீரரும், பயிற்சியாளருமான அன்ஷுமான் கெய்க்வாட் புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்து வந்த நிலையில் சிகிச்சைப் பலனளிக்காமல் காலமானார். அவருக்கு வயது 71.இந்தியா அணிக்காக 40 டெஸ்ட் மற்றும் 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அன்ஷுமான் கெய்க்வாட் , 22 ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கையில் மொத்தம் 205 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ளார்.
We are deeply saddened by the passing of Mr. Aunshuman Gaekwad, the esteemed President of ICA.
— Indian Cricketers' Association (@IndCricketAssoc) August 1, 2024
Our thoughts and prayers are with his family, friends, and all those who had the privilege of knowing him.
May his soul rest in peace.#RIPAunshumanGaekwad pic.twitter.com/LyUDS55VIl

இரண்டு முறை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றினார் அன்ஷுமான் கெய்க்வாட். அவரது பயிற்சியின் கீழ், இந்திய அணி 2000ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
கடந்த சில வருடங்களாகவே ரத்தப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அன்ஷுமான் கெய்க்வாட், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். லண்டன் கிங்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த மாதம் நாடு திரும்பியிருந்தார். அவருடைய சிகிச்சை செலவுகளுக்காக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கபில்தேவ் நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டதன் பலனாக பிசிசிஐ ரூ.1 கோடி நிதியுதவி செய்திருந்தது. அவரின் மறைவுக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, சவுரவ் கங்குலி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!