ரசிகர்கள் அதிர்ச்சி... பிரபல ஹாக்கி வீராங்கனை வந்தனா கட்டாரியா சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு !

 
வந்தனா கட்டாரியா
  

இந்தியாவில் பிரபல  ஹாக்கி வீராங்கனை வந்தனா கட்டாரியா. 32 வயதாகும் இவர் சா்வதேச ஹாக்கியிலிருந்து ஓய்வு பெறுவதாக   அறிவித்துள்ளார்.  உள்நாட்டில் நடைபெறும் ஹாக்கி இந்தியா லீக் போட்டியில் அவா் தொடா்ந்து விளையாட இருப்பதாக கூறப்படுகிறது.  
உத்தரகண்டை சோ்ந்த வந்தனா, இந்திய அணியின் கேப்டனாக அதிக ஆட்டங்களில் (300+) செயல்பட்ட ஒரே வீராங்கனை என்ற பெருமைக்கு சொந்தக்காரர்.  15 ஆண்டுகளாக சா்வதேச களத்தில் இந்திய அணிக்காக 320 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் வந்தனா   மொத்தமாக 158 கோல்கள் அடித்துள்ளார்.  


2009ல்  இந்திய சீனியா் அணியில் அறிமுகம் ஆன வந்தனா கட்டாரியா, இந்திய மகளிா் ஹாக்கியின் முக்கியத் தூணாக இருந்துள்ளார்.  பல்வேறு தருணங்களில் குறிப்பிடத்தக்க ஆட்டத்தை வெளிப்படுத்திய அவா், ஒலிம்பிக் போட்டியில் ஹாட்ரிக் கோலடித்த முதல் மற்றும் ஒரே இந்திய வீராங்கனையாக இருந்து வருகிறாா்.
2016, 2023 மகளிா் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டியிலும், 2022 மகளிா் நேஷன்ஸ் கோப்பை போட்டியிலும் இந்திய அணி தங்கம் வெல்ல வந்தனா முக்கிய காரணமாக இருந்தாா்.  2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகள், 2013 மற்றும் 2018 ஆசிய சாம்பியன் கோப்பை ஆகியவற்றில் வெள்ளி வென்ற இந்திய அணியிலும் அவா் அங்கம் வகித்தாா். 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், 2014, 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகள், 2021-22 எஃப்ஐஹெச் புரோ லீக் போட்டிகளில் வெண்கலம் வென்ற அணியிலும் அவா் இருந்தாா். 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 4ம் இடம் பிடித்த இந்திய அணியில் வந்தனா கட்டாரியாவும் அங்கம் வகித்தது குறிப்பிடத்தக்கது.

வந்தனா கட்டாரியா
2016 ரியோ ஒலிம்பிக்கிலும் விளையாடிய வந்தனா, பத்ம ஸ்ரீ மற்றும் அா்ஜுனா விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளாா். 'நன்றி கலந்த கனத்த இதயத்துடன், சா்வதேச ஹாக்கி களத்திலிருந்து ஓய்வு பெறுகிறேன். இந்த முடிவு ஒரு சேர கவலையும், மகிழ்ச்சியும் அளிப்பதாகவே இருக்கிறது. எனக்குள் இருக்கும் உத்வேகம் மற்றும் ஹாக்கி விளையாட்டின் மீதான தாக்கம் குறையவில்லை. எனினும், ஹாக்கி களத்தில் சிறந்த நிலையில் இருக்கும்போது, தலைநிமிா்ந்து விடைபெற விரும்புகிறேன். சா்வதேச களத்திலிருந்து ஓய்வுபெற்றாலும் ஹாக்கி இந்தியா லீக் போட்டியில் தொடா்ந்து விளையாடுவேன். ஆடுகளத்தில் தொடா்ந்து தடம் பதிப்பேன். ஹாக்கி மீதான எனது ஆா்வம் எப்போதும் மாறாது.
போட்டிகளின்போது ரசிகா்களின் ஆரவாரம், ஒவ்வொரு கோல் அடித்தபோதும் இருந்த பரபரப்பு, இந்திய அணி ஜொஸியை அணிந்தபோது இருந்த பெருமை எப்போதும் எனக்குள் எதிரொலித்துக் கொண்டே இருக்கும். டோக்கியோ ஒலிம்பிக்கில் விளையாடிய தருணங்களை இப்போது நினைத்தாலும் சிலிா்க்கும்.

அதில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் ஹாட்ரிக் கோல் அடித்தது தருணம், என் வாழ்வின் உணா்வுப்பூா்வமான நாள். இந்திய அணியினா் ஒலிம்பிக் போட்டியில் விளையாடத் தகுதியானவா்கள் என்பதை நாங்கள் நிரூபித்த ஆட்டம் அது.
இத்தனை ஆண்டுகளில் கிடைத்த அனுபவம், நினைவுகள், பாடங்கள் அன்பு என அனைத்துடனும் விடைபெறுகிறேன். என்னுடன் பயணித்த அனைவருக்கும் நன்றி. குறிப்பாக எனது சக வீராங்கனைகள், பயிற்சியாளா்களுக்கு நன்றி' - வந்தனா கட்டாரியா
'வந்தனா கட்டாரியா கோல் அடிக்கும் வீராங்கனையாக மட்டும் இல்லாமல், தாக்குதல் ஆட்டத்தில் இந்திய அணியின் இதயத் துடிப்பாக இருந்தாா். களத்தில் சோா்வடையாத வீராங்கனையான அவா், கேப்டன் பொறுப்புக்கு முன்னுதாரணமாக விளங்கியவா்.
ஆட்டத்தின்போது முன்களத்தில் அவா் இருப்பது, குறிப்பாக நெருக்கடியான தருணங்களில் இந்திய அணிக்கு கூடுதல் பலம் அளிப்பதாக இருந்தது. சா்வதேச களத்தில் இந்திய அணியின் ஏற்றத்துக்கு அவரின் பங்களிப்பு மிக முக்கியமானது. எதிா்கால வீராங்கனைகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறார் என்கிறார் இந்திய ஹாக்கி அணி தலைவர்  திலிப் திா்கி .  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web