அதிர்ச்சி... பிரபல நகைச்சுவை நடிகர் காலமானார்!!

 
ஆர்.எஸ் சிவாஜி

தமிழ் திரைப்பட இயக்குநர் சந்தான பாரதியின் சகோதரும் நகைச்சுவை நடிகருமான ஆர். எஸ். சிவாஜி இன்று காலமானார். இவருக்கு வயது 66.  பழம்பெரும் நடிகரும், தயாரிப்பாளருமான எம்.ஆர். சந்தானத்தின் மகனான ஆர்.எஸ்.சிவாஜி, நடிகரும் இயக்குநருமான சந்தானபாரதியின் சகோதரர். இவர் 'பன்னீர் புஷ்பங்கள்' படத்தில் நடிகராக அறிமுகமானார்.

ஆர்.எஸ் சிவாஜி

இந்த படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.  நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து பல படங்களில் தொடர்ந்து நடித்து வந்துள்ளார். 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் இவர் பேசிய 'சார், நீங்க எங்கேயோ போயிட்டீங்க சார்' வசனம் ரசிகர்களிடையே பிரபலமடைந்தது .  

ஆர்.எஸ் சிவாஜி

ஆர்.எஸ். சிவாஜி சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்தார்.  நேற்று, இவரது நடிப்பில் 'லக்கிமேன்' திரைப்படம் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆர்.எஸ்.சிவாஜியின் திடீர் மறைவு திரைப்பிரபலங்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது இவரது மறைவிற்கு திரைத்துறையினர், ரசிகர்கள், நண்பர்கள், உறவினர்கள்  இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web