திரையுலகில் சோகம்... பிரபல காமெடி நடிகர் காலமானார்... நாளை இறுதி அஞ்சலி!
பிரபல நகைச்சுவை நடிகர் சேஷூ காலமானார். இவருக்கு வயது 60. இவர் மாரடைப்பு காரணமாக கடந்த சில நாட்களாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது திடீர் மறைவிற்கு திரையுலக நட்சத்திரங்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரபல காமெடி நடிகர் 'லொள்ளு சபா’ சேஷூ திடீர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் இன்று காலமானார்.நடிகர்கள் சந்தானம், ஜீவா, மனோகர், சேஷூ என 'லொள்ளு சபா’ நிகழ்ச்சியில் வலம் வந்த நடிகர்கள் ரசிகர்களிடையே நன்கு பரிட்சயமானார்கள்.
இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த நடிகர் சேஷு திடீர் மாரடைப்பு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது நண்பரும் நடிகருமான உதயா முகநூல் பக்கத்தில், நடிகர் சேஷூவின் சிகிச்சைக்கு உதவி கோரியும் பதிவிட்டிருந்தார்.
25க்கும் அதிகமான திரைப்படங்களில் சந்தானம், யோகிபாபு ஆகியோருடன் சேர்ந்து நடித்திருக்கிறார் சேஷூ.
சமீபத்தில் இவர் சந்தானத்துடன் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தில் இணைந்து நடித்திருந்தார். கொரோனா சமயத்தில் ஓடிப்போய் பலருக்கும் உதவியது, பல ஏழைப் பெண்களுக்கு திருமணம் நடத்தி வைத்தது என உதவும் கொண்டவராகவும் இருந்தவர் சேசு.‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தில் இவரது கதாபாத்திரம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.10' நாட்களாக வென்டிலேட்டர் உதவியுடன் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லொள்ளு சபா, வடக்குப்பட்டி ராமசாமி புகழ் நடிகர் சேஷூ காலமானார்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!