குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை.. தனக்கு தானே செய்து கொண்ட மருத்துவர்!
குடும்பக் கட்டுப்பாட்டைப் பொறுத்தவரை, பெண்கள் பொதுவாக அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்கள். ஆனால் நவீன மருத்துவ சிகிச்சையில், ஆண்களும் குடும்பக் கட்டுப்பாட்டை மேற்கொண்டுள்ளனர். ஆண்களுக்கான குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை வாஸெக்டமி என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில், தைவானின் தைபேயைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர் பென் வெய்-நாங் தனக்குத்தானே ஒரு வாஸெக்டமி செய்து கொண்டு அதை இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டார்.
இந்த வீடியோ 4 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. 3 குழந்தைகளின் தந்தையான டாக்டர் சென் வெய்-நாங், தனது மனைவிக்கு அதிக குழந்தைகள் வேண்டாம் என்று கூறினார். தனது மனைவியை மகிழ்விக்கவும், ஆண் கருத்தடை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தான் தனக்குத்தானே ஒரு வாஸெக்டமி செய்து கொண்டதாகவும் கூறினார்.
பொதுவாக, இதுபோன்ற அறுவை சிகிச்சைகள் 15 நிமிடங்கள் மட்டுமே ஆகும். ஆனால் டாக்டர் சென் வெய்-நாங், தனக்குத்தானே அறுவை சிகிச்சை செய்து கொண்டதால், அது சுமார் 1 மணிநேரம் ஆனது என்றும், தனக்குத்தானே கருத்தடை செய்து கொள்வது ஒரு விசித்திரமான அனுபவம் என்றும் கூறினார். அவரது அறுவை சிகிச்சையின் வீடியோ வைரலானபோது, பல நெட்டிசன்கள் அவரது துணிச்சலைப் பாராட்டினர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!