வழக்கறிஞர் மீது பொய்யான வழக்குப்பதிவு... எஸ்பியிடம் மனைவி புகார்!

 
ஏனோக் மேன்லின், உஷா
தூத்துக்குடியில் வழக்கறிஞர் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பிசிஆர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக வழக்கறிஞரின் மனைவி எஸ்பியிடம் மனு அளித்துள்ளார். 

தூத்துக்குடி டூவிபுரம் 2வது தெருவைச் சேர்ந்தவர் ஏனோக் மேன்லின். இவரது மனைவி உஷா (36). இந்நிலையில், உஷா தனது குழந்தைகளுடன் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து அளித்துள்ள மனுவில், "எனது கணவர் ஏனோக் மேன்லின் என்பவர் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். 

இந்நிலையில் கடந்த 24ம் தேதி என்னை சாதி ரீதியாக கொடுமைப்படுத்தியதாக நான் Dr.சுந்தரலிங்கம் சாந்தி பேக்கரி செந்தில், சௌந்திர பாண்டிய நாடார், கூலிப்படை தலைவர் பாண்டி, புருஷோத்தமன் ஆகியோர் மீது தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தேன். 

அப்புகார் மனு மீதான எவ்வித விசாரணையும் மேற்கொள்ளாமல எனது கணவர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை உருவாக்கி தலித் சமுதாயத்தை சார்ந்த ஒருவரை வைத்து என் கணவருக்கு எதிராக புகார் மனு பெற்றுக்கொண்டு என் கணவர் மீது சட்ட முரணான வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

கோர்ட் தூத்துக்குடி

என் கணவர் மீது பதியப்பட்ட வழக்கு பற்றியோ, எனது கணவருக்கு எதிராக புகார் அளித்த நபர் பற்றியோ எந்த விபரமும் எனக்கு தெரியாது. நான் கடந்த 24ம் தேதி அளித்த புகார் மனுக்கு பொய்யான காரணங்களை உருவாக்கி டாக்டர் சுந்தரலிங்கம் என்பவரிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு என் கணவர் மீது காவல்துறை அதிகாரிகள் பொய் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இன்று காலை 9 மணியளவில் வீட்டிற்கு வந்து எனது கணவரை கைது செய்த போது தான் மேற்படி விபரம் தெரியவந்தது.

பொய்யான குற்றச்சாட்டுகளை கொண்டு எனது கணவரை கைது செய்ததால் எனது கணவருக்கு திடீரென நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் போன்றவை மன அழுத்தத்தால் ஏற்பட்டுள்ளது. எனவே எனது கணவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கோர்ட் ஹேம்மர்

தற்போது காவல்துறை அதிகாரிகள் எனது கணவரை மருத்துவமனையில் இருந்து வெளியேறும்படி கணவரை மிரட்டி வருகின்றனர். எனவே சட்ட முரணாக செயல்பட்டு வரும் மத்திய பாகம் காவல் அதிகாரிகள் மற்றும் டவுண் ஏஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்கும்படியும், எனது கணவரை உயிருடன் மீட்டுத் தரும்படியும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web