பகீர்.. திருநங்கைகளின் தலைவியை வெட்டி படுகொலை செய்த கொடூரம்.. மர்ம நபர்கள் வெறிச்செயல்!

 
ஹாசினி

ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், கொடவலூர் மண்டலம், தபதோபு கிராமத்தைச் சேர்ந்தவர் ஹாசினி (35), திருநங்கை. திருப்பதி மாவட்டம் நெல்லூர் பகுதிகளைச் சேர்ந்த திருநங்கைகளின் தலைவராக இருந்தார். இந்நிலையில் நேற்று பார்லப்பள்ளி கிராமத்தில் உள்ள கோவிலுக்கு ஹாசினி சென்றார். சுவாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, ​​கார்களில் வந்த மர்ம நபர்கள் திடீரென ஹாசினியை சூழ்ந்து கொண்டு அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

அவர்களிடம் இருந்து தப்பிக்க ஹாசினி முயன்றார். ஆனால் மர்ம நபர்கள் அவரை துரத்தி பலமுறை சரமாரியாக வெட்டினர். பின்னர் அந்த கும்பல் காரில் ஏறி தப்பிச் சென்றது. இதில் பலத்த காயம் அடைந்த ஹாசினி ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் கொடவலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் ஹாசினியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

போலீஸ்

இதையடுத்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலைக்கான காரணம் மற்றும் கொலையாளிகள் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருநங்கை தலைவி மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web