பகீர்... நீட் பயிற்சி மாணவியை 6 மாதங்களாக அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை... வெறித்தனமாக மாறிய 2 ஆசிரியர்கள்!
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், பெரும் அதிர்ச்சி சம்பவமாக உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் நீட் பயிற்சி பெற்று வந்த மாணவி ஒருவரை பயிற்சி மையத்தில் ஆசிரியர்களாக இருந்த 2 பேர், கடந்த 6 மாதங்களாக வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்து தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த புகாரின் பேரில் 2 ஆசிரியர்களும் தற்போது கைது செய்யப்பட்டனர்.
கடந்த ஜனவரி மாதம் பார்ட்டி என்று கூறி, மாணவியை ஏமாற்றி வீட்டிற்கு வரவழைத்த உயிரியல் ஆசிரியர், அதன் பின்னர் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மாணவியின் அத்துமீறி கற்பழித்துள்ளார்.
இந்நிலையில், மயக்கம் தெளிந்த மாணவியிடம் தான் கற்பழித்த வீடியோவைப் பதிவு செய்து வைத்திருப்பதாக கூறி, வீடியோவைக் காட்டியிருக்கிறார். மாணவியைத் தொடர்ந்து ஆபாசமாக நிர்வாண வீடியோக்களையும் பதிவு செய்து வைத்திருந்த ஆசிரியர், இது குறித்து வெளியே சொன்னால் குடும்பத்தினருக்கு ஆபத்து ஏற்படும் எனவும் மாணவியைத் தொடர்ந்து மிரட்டியுள்ளார்.
இந்நிலையில் கடந்த 6 மாதங்களாக 2 ஆசிரியர்களும் தன்னை வீட்டிற்கு அடைத்து வைத்து, இப்படி வீடியோவை வெளியிட்டு விடுவோம் என்று கூறி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளதாக பாதிக்கப்பட்ட சிறுமி புகாரில் தெரிவித்துள்ளார். இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!