பகீர்... மனைவியை 8 துண்டுகளாக வெட்டி சூட்கேசில் அடைத்து வீசிய கணவன்!
திருவண்ணாமலை மாவட்டம் கோபுரத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் கோபி. ஆட்டோ ஓட்டுநரான கோபி, அதே பகுதியில் பைனான்ஸ் தொழிலும் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக கோபியை விட்டு அவரது மனைவி பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், திருவண்ணாமலை அரசுடையான்பட்டு பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரது மகள் சரண்யாவை(29) கோபி 2வதாக திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், கோபிக்கும், சரண்யாவுக்கும் அடிக்கடி குடும்பப் பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தீபாவளிக்கு முந்தைய நாள் மீண்டும் வழக்கம் போல் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், அதன் பின்னர் சரண்யா மாயமானார். தங்களது தாயார் குறித்து கோபியிடம் குழந்தைகள் கேட்ட போது சரண்யா கோபித்து கொண்டு அரசுடையான்பட்டுக்கு சென்று விட்டதாக கூறியுள்ளார்.
இந்நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு சரண்யாவை காணவில்லை என்று கோபி தரப்பினர் திருவண்ணாமலை டவுன் போலீசில் புகார் செய்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் சரண்யாவின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். மகள் காணாமல் போனது குறித்து தகலறிந்து அதிர்ச்சியடைந்த சரண்யாவின் குடும்பத்தினர் திருவண்ணாமலைக்கு சென்று பேரக்குழந்தைகளிடம் இது குறித்து கேட்ட போது அம்மா உங்கள் வீட்டிற்கு தான் சென்றுள்ளதாக அப்பா தெரிவித்ததாக கூறியுள்ளனர்.
இதனால் சந்தேகம் அடைந்த சரண்யாவின் பெற்றோர், திருவண்ணாமலை டவுன் போலீசில் இது குறித்து புகார் செய்து தங்களது சந்தேகத்தையும் தெரிவித்தனர். அதன் பேரில் கோபியிடம் விசாரணை நடத்த அவரது வீட்டிற்கு போலீசார் சென்றனர். போலீசார் வருவதை கண்டதும் கோபி வீட்டில் இருந்து தப்பி சென்று விட்டார். வீட்டில் இருந்த கோபியின் தாய் சிவகாமியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
ஆரம்பத்தில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்த அவர் பின்னர் சரண்யாவை கொலை செய்து துண்டு, துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூளகிரி காட்டு பகுதியில் வீசியதாக தெரிவித்தார். மேலும் போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் தலைமறைவாக இருந்த கோபியும் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் போலீசார் கோபி மற்றும் சிவகாமியை அழைத்து கொண்டு சரண்யாவின் உடல் வீசப்பட்ட இடத்திற்கு சென்றனர்.
சூளகிரி காட்டுப்பகுதியில் சரண்யாவின் உடல் 8 துண்டுகளாக வெட்டப்பட்டு சூட்கேசில் கவரில் கட்டப்பட்ட நிலையில் கிடந்தது. அதிலும் தலை உள்ளிட்ட ஒரு சில உடல்பாகங்கள் மட்டுமே கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!