பகீர்.. செல்போன் டவர் சிக்னல் கருவி ஆட்டைய போட்ட 5 பேர் கைது!

 
செல்போன் டவர்

திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே சாலை நகர், ஓட்டப்பட்டி, குடியானகுப்பம் உள்ளிட்ட ஐந்து இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான செல்போன் டவரில் இருந்து கடந்த ஆண்டு சிக்னல் கருவி திருடப்பட்டது. இதனால் செல்போன் டவரில் இருந்து வரும் சிக்னல் துண்டிக்கப்பட்டது.

தகவலறிந்த வாணியம்பாடி நடுப்பட்டு கிராமத்தை சேர்ந்த செல்போன் டவர் டெக்னீசியன் சாமுவேல்(40). செல்போன் டவர்களை ஆய்வு செய்தபோது டவரில் இருந்து சிக்னல் கருவி திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.பின்னர் இது குறித்து ஜோலார்பேட்டை போலீசில் அவர் புகார் அளித்தார். அதன்பேரின் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், போலீசார் நேற்று ஜோலார்பேட்டை மற்றும் சுற்று வட்டாரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பொன்னேரி அருகே ஜோலார்பேட்டை நோக்கி வந்த காரை சந்தேகத்தின் பேரில் மடக்கி நிறுத்தி ஆய்வு செய்த போது, ஐந்து பேர் கொண்ட கும்பல் இருந்தது. விசாரணையில் இவர்கள் பல்வேறு குற்ற பின்னணிகளில் தொடர்புடையவர்கள் என தெரியவந்தது.தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மாரிமுத்து(30), சிவகுமார்(35), திருப்பத்துார் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே மள்ளப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் செல்வகுமார்(30), தோனி(எ) அபிலேஷ்குமார்(30), மற்றும் பிரதாப்(24).என்பதும்,  இந்த கும்பல் சம்பவத்தன்று செல்போன் டவரில் இருந்து சிக்னல் கருவிகளை திருடியது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து போலீசார் சம்பந்தப்பட்ட ஐந்து பேரை கைது செய்தனர். முன்னதாக அவர்களிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான செல்போன் டவர் சிக்னல் கருவிகள் மற்றும் கார் ஒன்றை பறிமுதல் செய்தனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web