பகீர்.. தீபாவளி சீட்டி மோசடி.. ரூ.50 லட்சத்தை அமுக்கிய கணவன் - மனைவி கைது!

 
முரளிதரன் - ஜெயா

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எலவனாசூர்கோட்டை கீழ்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முரளிதரன். இவர் நெடுமானூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜெயா எலவனாசூர்கோட்டை கடை சாலையில் கடை நடத்தி வியாபாரம் செய்து வருகிறார்.

மோசடி

இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து தீபாவளி ஏலச்சீட்டு நடத்தி கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.50 லட்சம் வசூல் செய்துள்ளனர். ஆனால், பணம் செலுத்தியவர்களிடம் இதுவரை பணம் திரும்ப வரவில்லை என எலவனாசூர்கோட்டை காவல் நிலையத்தில் 100க்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இதையடுத்து, அரசுப் பள்ளி ஆசிரியர் முரளிதரன், அவரது மனைவி ஜெயா ஆகிய இருவரையும் போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். இதையடுத்து, கைதான ஆசிரியர் முரளிதரன் மற்றும் அவரது மனைவி ஜெயாவிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில், ஆன்லைன் மூலம் வியாபாரம் செய்து பொதுமக்களிடம் வசூலித்த ரூ.50 லட்சத்தை ஏமாற்றியதை ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட இருவர் மீதும் மோசடி வழக்குப் பதிவு செய்து உளுந்தூர்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web