பகீர்.. ராட்சத அலையில் சிக்கிய சொகுசு கப்பல்.. 3 பேர் சடலமாக மீட்பு.. பலர் படுகாயம்!
எகிப்தின் செங்கடல் பகுதியில் உள்ள மார்சா ஆலத்தில் இருந்து சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு கப்பல் புறப்பட்டது. நான்கு அடுக்குகள் கொண்ட கப்பலில் அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன், போலந்து, பெல்ஜியம், சுவிட்சர்லாந்து, பின்லாந்து, சீனா, ஸ்லோவாக்கியா, ஸ்பெயின் மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 31 சுற்றுலாப் பயணிகள் உட்பட 44 பேர் மற்றும் 13 பணியாளர்கள் இருந்தனர். இந்த கப்பல் நேற்று அதிகாலை செங்கடலில் பயணம் செய்து கொண்டிருந்த போது ராட்சத அலையில் சிக்கியது.
இதனால், கண் இமைக்கும் நேரத்தில் கப்பல் கவிழ்ந்து மூழ்கத் தொடங்கியது. தகவல் கிடைத்ததும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மூழ்கிய கப்பலில் இருந்து 28 பேரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பலத்த காயமடைந்த சிலர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சில நிமிடங்களில் கப்பல் முற்றிலும் மூழ்கியது. மீதமுள்ள 16 பேரை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இன்று 3 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். மற்ற 13 பேர் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை.
தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. செங்கடலில் நிலவும் கொந்தளிப்பான சூழல் காரணமாக ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் செங்கடல் பகுதியில் பயணிக்க வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இராணுவ மோதல்களால் ஏற்படும் ஆபத்துகள் காரணமாக, பல்வேறு சுற்றுலா நிறுவனங்கள் செங்கடலில் படகுகளை இயக்குவதை நிறுத்திவிட்டன. சில நிறுவனங்கள் வரையறுக்கப்பட்ட அடிப்படையில் படகுகளை இயக்குகின்றன.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!