மீண்டும் முடங்கியது பேஸ்புக்! பயனர்கள் அவதி!
Oct 10, 2021, 11:07 IST

உலகம் முழுவதும் தகவல் பரிமாற்றத்திற்கு அநேகமானவர்களின் முதல் சாய்சாக இருப்பது வாட்ஸ் அப் செயலி. இந்த செயலி திங்கட் கிழமை தொடர்ந்து 6 மணி நேரம் முடங்கியது. இதனால் பயனர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இதற்கு வாட்ஸ் அப் நிறுவனர் பகிரங்க மன்னிப்பு கேட்டிருந்தார்.

ஆனால் கோடிக்கபேஸ்புக் நிறுவனத்தின் பேஸ்புக், 2வது முறையாக நேற்று முன்தினம் மீண்டும் சில இடங்களில் பேஸ்புக் வலைதள சேவை முடக்கப்பட்டது. இது குறித்து பேஸ்புக் நிறுவனம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் எங்கள் செயலிகள், தயாரிப்புகளை பயன்படுத்துவதில் பயனாளர்கள் சிலருக்கு சிரமம் ஏற்பட்டு வருகிறது. எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக சேவையை இயல்புநிலைக்கு கொண்டுவர தீவிரமாக முயற்சி செய்து வருகிறோம். இந்த தடங்கலுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கோருகிறோம் எனத் தெரிவித்துள்ளது.