எஸ்றா சற்குணம் இறுதிசடங்குகள்... முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

 
எஸ்றா சற்குணம்

சென்னை வானகரத்தில் இன்று உடல்நலக் குறைவால் காலமான பேராயர் எஸ்றா சற்குணம் இறுதியஞ்சலி நிகழ்வில் நேரில் கலந்து கொண்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

எஸ்ரா சற்குணத்தின் இறுதி மரியாதை நிகழ்வில் முதல்வர் ஸ்டாலினுடன் அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு, சென்னை மேயர் பிரியா ஆகியோரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம் சென்னையில் உடல்நலக் குறைவால் கடந்த செப்டம்பர் 22ம் தேதி மாலை சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்த நிலையில், அவரது மகள் வெளிநாட்டில் இருந்ததால் இன்று செப்டம்பர் 26ம் தேதி இறுதிசடங்குகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

எஸ்ரா சற்குணம்

இந்நிலையில், இன்று சென்னை வானகரத்தில் எஸ்ரா சற்குணத்தின் இறுதி மரியாதை நிகழ்வுகள் நடைபெற்று வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். 

முன்னதாக இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவரும் இந்திய சுவிசேஷ திருச்சபை (இசிஐ) பேராயருமான எஸ்றா சற்குணம் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில வாரங்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், கடந்த வாரத்தில் அவரது உடல்நிலை மோசமானதால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 21ம் தேதி மாலை 5.30 மணி அளவில் எஸ்றா சற்குணம் காலமானார்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web