பல பெண்களுடன் தகாத உறவு.. ஆத்திரத்தில் மொத்த குடும்பமும் சேர்ந்து கொலைச் செய்த கொடூரம்!
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள தண்டுகாரன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மார்க்கண்டன். இவரது மகன் சிவப்பிரகாசம் (47). இவருக்கு திருமணமாகி பொன்னுருவி என்ற மனைவியும், நித்யா, சந்தியா, ரம்யா ஆகிய 3 மகள்களும் , நந்தகுமார் என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், கட்டட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார் சிவப்பிரகாசம். இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன், வீட்டுக்கு வந்த சிவப்பிரகாசம், அருகே, பெருமாள் கோவிலுக்கு பின்புறம் புதர் பகுதியில் ஒரு கை மட்டும் கட்டப்பட்டு, கத்தியால் குத்திய நிலையில், பலத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இச்சம்பவம் குறித்து தொப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் மற்றும் தொப்பூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து நேரில் ஆய்வு செய்தனர். அப்போது சிவபிரகாஷை மர்ம நபர்கள் சிலர் கத்தியால் குத்தி கொன்று விட்டு ஒரு கையை கயிற்றால் கட்டி சுமார் 200 மீட்டர் தூரம் வரை இழுத்து சென்று புதரில் வீசிவிட்டு தப்பியோடியது தெரிய வந்தது. இதையடுத்து சிவபிரகாஷின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிவப்பிரகாசம் என்பவரது வீட்டின் அருகே இந்த கொலை நடந்ததால், அவரது மனைவி பொன்னுருவி, 37, மருமகன் சிவக்குமார், 28, ஆகியோரை போலீசார் விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். சிவப்பிரகாசத்தின் நித்தியா, சந்தியா என்ற இரு மகள்களுக்குத் திருமணம் நடந்தது.
தந்தை சிவப்பிரகாசம் குடித்து விட்டு பல பெண்களுடன் தகாத உறவை வைத்திருந்து உள்ளார். இதனால், மகள் நித்யா திருமணமாகி ஆறு ஆண்டுகளாக தாய் வீட்டிற்கு வரவில்லை, இரண்டாவது மகள் சந்தியாவின் கணவர் மூன்று மாதங்களுக்கு முன்பு மாமனார் வீட்டிற்கு வந்த நிலையில் தகராறு ஏற்பட்டுள்ளது, அவர்களும் மூன்று மாதங்களாக அவரது மாமனார் வீட்டிற்கு வரவில்லை. ஒரு மாதத்திற்கு முன்பு மருமகன் சிவக்குமார் மாமனாரை பார்க்க வீட்டுக்கு வந்தபோது, மாமனார் தகாத உறவில் ஈடுபட்டதாக கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவி பொன்னுருவி, அவரை உயிருடன் விடக்கூடாது என கூறினார். இந்நிலையில், ஓசூரில் கணவர் சிவகுமாருடன் பணிபுரியும் பாளையம்புதூரை சேர்ந்த தோழி ஒருவர், சிவப்பிரகாசத்தின் மனைவியிடம், உங்கள் கணவர் ஓசூரில் வேறு ஒரு பெண்ணுடன் தகாத உறவில் ஈடுபட்டு தனி வீடு எடுத்து குடும்பம் நடத்தி வருகிறார் என கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த பொன்னுருவி, மருமகன் சிவகுமாரை அழைத்து சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். தர்மபுரியில் வெல்டிங் தொழில் செய்து வருவதால் கடையில் இருந்த நண்பர் பிரபுவிடம் சிவக்குமார் கூறியுள்ளார். எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த பிரபுவின் நண்பர்கள் திருப்பதி, முல்லைவேந்தன் முகிலரசு, எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த 2 பேர் ஆகிய 7 பேர் இந்த திட்டத்தை வகுத்துள்ளனர். கொலைக்கு மூன்று லட்சம் ரூபாய் முன்பணமாக பத்தாயிரம் ரூபாயை சிவக்குமார் கொடுத்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு உறவினரின் இறுதிச் சடங்கிற்கு வந்த சிவப்பிரகாசம் மது அருந்திவிட்டு வீட்டில் தூங்கச் சென்றபோது, அவரை வெளியே சென்று தூங்குமாறு மனைவி பொன்னுருவி கூறியுள்ளார்.
இதையடுத்து, வீட்டில் இருந்து வெளியே வந்த சிவப்பிரகாசம், அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த அவரை, ஏழு பேர் சேர்ந்து, கத்தியால் சிவப்பிரகாசத்தின் இதயத்தில் சரமாரியாக குத்தி கொன்றனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் கைகளை துணியால் கட்டி 200 மீட்டர் தூரம் இழுத்து சென்று புதர் அருகே விட்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து திருப்பதி 27, எம்ஜிஆர் நகரை சேர்ந்த பிரபு 28, வெள்ளக்கல் பகுதியை சேர்ந்த முகிலரசு 23, முல்லைவேந்தன் 28 ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் 9 பேர் திட்டமிட்டு கொலை செய்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து 7 பேரையும் நீதிமன்றக் காவலில் வைத்து சிறையில் அடைத்த போலீஸார். மேலும், இந்த கொலையில் ஈடுபட்டு தலைமறைவான இரண்டு முக்கிய குற்றவாளிகளை போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!