நெல்லையில் பரபரப்பு... இன்ஸ்பெக்டர் மீது பாட்டில் குண்டு வீச்சு!

 
மணிகண்டன்


நெல்லையில் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட 4 பேர் கும்பல், இன்ஸ்பெக்டர் மீது பாட்டில் குண்டு வீசியது. கற்களும் வீசப்பட்டதால் ரோந்து வாகன கண்ணாடி உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை டவுன் வலுக்கோடை பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஆட்டோவில் சிலர் மது குடித்துக் கொண்டு இருந்தனர். இதுகுறித்து நெல்லை டவுன் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் சம்பவ இடத்துக்கு விரைந்தார். அங்கு ஆட்டோவில் மது குடித்துக்கொண்டு இருந்தவர்களை வீட்டுக்கு போகச்சொல்லி கூறினார். 

திருநெல்வேலி

அப்போது அவர்களுக்கும், இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணனுக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்கள் தகராறில் ஈடுபட்டனர். அப்போது, அந்த கும்பலில் இருந்த ஒருவர் திடீரென்று மதுபாட்டிலில் துணியை கட்டி தீ வைத்து இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் மீது வீசினார். இதை பார்த்து அவர் விலகியதால் அதிர்ஷ்டவசமாக தப்பினார்.

மேலும் அந்த கும்பலில் இருந்த சிலர் கற்களை வீசியதால் அங்கிருந்த போலீஸ் ரோந்து வாகனத்தின் கண்ணாடி உடைந்தது. தகவல் அறிந்ததும் கூடுதல் போலீசார் சம்பவ இடத்துக்கு வருவதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டது. போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டது 4 பேர் கொண்ட கும்பல் என்பது தெரியவந்தது.

இளம் நடிகர் கைது

அதாவது, நெல்லை டவுன் பழனி தெருவை சேர்ந்த சந்தானம் மகன் அருணாசலம் (வயது 25), கருணாநிதி நகர் நாராயணன் மகன் இசக்கிமுத்து (24), மாதா தெற்கு மேலத்தெரு சுடலைமணி மகன் மணிகண்டன் (23), பாளையங்கோட்டை கக்கன் நகர் சரவணன் மகன் மணிகண்டன் (22) ஆகிய 4 பேர் என்பது தெரிய வந்தது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கக்கன்நகர் மணிகண்டனை கைது செய்தனர். மற்ற 3 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள். நெல்லையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது பாட்டில் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web