13 ஆண்டுகளுக்குப் பின் குடும்பத்தினருடன் சேர்ந்த முன்னாள் ராணுவ கேப்டன்.. நெகிழ்ச்சி பின்னணி!

 
கந்தர்வ்சிங்

வீட்டிலிருந்து வெளியேறி குடும்பத்தை பிரிந்து 13 ஆண்டுகளுக்குப் பின்  மீண்டும் குடும்பத்தினருடன் பஞ்சாப் மாநில ஓய்வு பெற்ற இராணுவ கேப்டன் சேர்ந்த நெகிழ்ச்சியான சம்பவம் நாங்குநேரியில் இன்று நடந்தேறியது. கடந்த செப்.17 அன்று விஜயநாராயணம் கடற்படை தளம் அருகே சாலையில் சுற்றித் திரிந்த முதியவர் ஒருவரை விஜய நாராயணம் போலீசார் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவராக தெரிந்ததால் அவரை முதலில் பாதுகாப்பாக நாங்குநேரியில் உள்ள அரசன் முதியோர் மற்றும் பெண்கள் காப்பகத்தில் தங்க வைத்தனர். 

அதன் பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் பஞ்சாப் மாநிலம் பதான்கோட் பகுதியைச் சேர்ந்த கந்தர்வ்சிங் (73) என்பதும் ஓய்வு பெற்ற ராணுவ கேப்டன் என்பதும் தெரிய வந்தது. அவரது முதல் மனைவி இறந்த பிறகு இரண்டாவது திருமணம் செய்து அவருடன் வசித்து வந்துள்ளார். அப்போது ஏற்பட்ட குடும்ப பிரச்சனையால் அவர் மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியேறி மனம் போன போக்கில் தெற்கு நோக்கி சுமார் 4000 கிலோ மீட்டருக்கு மேல் சுற்றி திரிந்து வந்தது தெரிந்தது. 

இதனை அடுத்து விஜய நாராயணம் போலீசார் பஞ்சாப் எல்லையில் உள்ள பதான்கோட் பகுதி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து விசாரணை நடத்தியுள்ளனர்.அதில் கடந்த 2011ம் ஆண்டு பதான்கோட் காவல் நிலையத்தில் கந்தர்வ் சிங் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்துள்ள விவரம் தெரிய வந்துள்ளது. 

இதனை அடுத்து அவரது குடும்பத்தினருக்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அறிந்த அவரது மகன்கள் அணில் சிங் மற்றும் சுனில் சிங் ஆகியோர் குடும்பத்தினருடன் கந்தர்வ் சிங் எடுத்துக் கொண்ட பழைய புகைப்படங்களை பரிமாறி உறுதிப்படுத்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து இருவரும் விமான மூலம் சென்னையை அடைந்து அங்கிருந்து விஜயநாராயணம் காவல் நிலையத்திற்கு இன்று வந்துள்ளனர். அதன்பின் போலீசார் அவர்களை கந்தர்வ்சிங் தங்கி இருந்த நாங்குநேரி முதியோர் இல்லத்திற்கு அழைத்துச் சென்று அவரை அடையாளம் காட்டினார். 

அப்போது தனது மகன்களை கண்ட கந்தர்வ்சிங் குடும்பத்தின் பிரிவு துயரத்தை வெளிப்படுத்தி கண்ணீர் விட்டு அழுதார். அப்போது இரு மகன்களும் பாசத்தில் தந்தையை கட்டிப்பிடித்து அழுத காட்சி அங்கு இருந்தவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்து. அதன்பின் பஞ்சாப் மொழியில் மூவரும் பேசிக் கொண்டனர். பின்னர் கந்தர்வ்சிங் மகன்கள் கொண்டு வந்த உடைகளை மகிழ்ச்சியுடன் மாற்றிக்கொண்ட கந்தர்வ்சிங் அவர்களுடன் அங்கிருந்து புறப்பட்டார்.

அப்போது போலீசாரும் முதியோர் இல்லத்தில் தங்கியிருந்தவர்களும் மகிழ்ச்சியுடன் கந்தர்வ் சிங்கை வழி அனுப்பினர். பதிலுக்கு கந்தர்வ்சிங்  குடும்பத்தினரும் நன்றி தெரிவித்தனர். 13 ஆண்டுகள் கழித்து தங்களது தந்தை உயிருடன் கிடைத்தது எங்களது பாக்கியம் என மகன்கள் இருவரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.  இதற்காக முயற்சி எடுத்த விஜய நாராயணம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நாககுமாரி மற்றும் போலீசாரை அப்பகுதியினர் பாராட்டினர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

From around the web