முன்னாள் அமைச்சர் கார் கோவில் சுற்றுச்சுவரில் மோதி விபத்து.... தொண்டர்கள் அதிர்ச்சி!
அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியன். இவர் நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அதாவது அவர் வேதாரண்யத்தில் இருந்து கீழ்வேளூர் பகுதியில் நடைபெறும் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றதாக தெரிகிறது.அவருடைய கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பெரியாச்சி கோவில் சுற்றுச்சுவர் போது மோதி கோர விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஓட்டுநர் படுகாயம் அடைந்தார். இந்நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் அதிர்ஷ்டவசமாக காயங்கள் இன்றி உயிர்த்தப்பினார்.இச்சம்பவம் தொண்டர்களிடையே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!